புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்.. அனைத்து விலை குறைப்புகள் உட்பட முழு விபரம் இதோ.

புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் நிகழ்வுகளும் விபரங்களும்.

சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

பிரதம நீதியரசரை மாற்றும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது: தினேஸ் குணவர்தன.

பிரதம நீதியரசர் ஒருவர் பதவியில் இருக்கும் போதே இன்னும் ஒரு நபரை அப்பதவிக்கு நியமனம் செய்வது பாராளுமன்றத்துக்கு விடுக்கும் சவாலாகும் : தினேஸ் குணவர்தன இதை அறிவித்ததும் பாராளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பிரதம நீதியரசர் விடயம் தொடர்பாக நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும், எனவே நீங்கள் (தினேஸ் குணவர்தன) வாயை மூடிகொண்டு இருங்கள்: ரணில்

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறு நாட்டுமக்கள் கோரியிருந்தனர். எனவே இதனை இப்போது நிறைவேற்றுகின்றோம் : ரணில்

புதிய தேர்தல் முறைகள் தொடர்பில் நாளை அறிக்கை வெளியிடப்படும்: ரணில்

நாட்டில் கசினோ, போதைப்பொருள் வியாபாரம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனை தற்போது ஒழித்துகொண்டிருக்கின்றோம்: ரணில்

hqdefault114 நாட்களுக்குள் நாட்டை மாற்றியுள்ளோம். இது உலக சாதனையாகும் : ரணில்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார். இடைக்கால வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கின்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய நாடு ஒன்று உருவாகியுள்ளது. எனவே நாட்டு மக்கள் சந்தோசமாக இருக்கலாம்: ரவி கருணாநாயக்க

கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்வதிகார ஆட்சியிலிருந்து நாட்டு மக்கள் விடுதலைப் பெற்றுள்ளனர்: ரவி கருணாநாயக்க

பிரித்தானியாவிடம் இருந்து எமது நாடு பெப்ரவரி 4 ஆம் திகதி விடுதலைப் பெற்றாலும் ஆட்சி கைப்பற்றி 8 ஆம் திகதியே சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும்: ரவி கருணாநாயக்க

கடந்த காலத்தில் எமது பிள்ளைகள் இருண்ட யுகத்தில் வாழ்ந்தனர். மக்களும் வாய் இருந்தும் ஊமைகளாக இருந்தனர். ஆனால் தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளது: ரவி கருணாநாயக்க

கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கட்டாயம் பெற்றுகொடுக்கப்படும்: ரவி கருணாநாயக்க

கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களை சிறையில் அடைத்தனர். ஆனால் தற்போது கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவருக்கே சிறைக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது: ரவி கருணாநாயக்க

2012 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கடன்தொகையாக 6 ஆயிரம் மில்லியன் காணப்பட்டதோடு 2013 இல் 6ஆயிரத்து 793 மில்லியனாகவும் 2014 இல் 7 ஆயிரத்து 373 மில்லியனாகவும் காணப்பட்டது: ரவி கருணாநாயக்க

  • பெப்ரவரி மாதத்திலிருந்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு. தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
  • தனியார் நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்படும். எனவே தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தொழில் வழங்குனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1000 ரூபா அதிகரிக்கப்படும்
  • வங்கிகளில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 15 வீதம் வட்டி வழங்க தீர்மானம்
  • கற்பிணி பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
  • ஒரு கிலோ தேயிலைக் கொழுந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை 80 ரூபா
  • விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு உழவு இயந்திரம் மற்றும் உர மானியம் வழங்கப்படும்.
  • மண்ணெண்ணெய் விலை மேலும் 6 ரூபாவால் குறைக்கப்படும்
  • நூற்றுக்கு 10 வீதம் பஸ் கட்டணம் குறைக்கப்படும். பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் நூற்றுக்கு 5 வீதத்தால் குறைக்கப்படும்.
  • சீனியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும்
  • 400கிராம் பால்மா விலை 325 ரூபாவாகும்
  • சஸ்டோஜன் பால்மாவின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
  • நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படும்
  • கொத்தமல்லி ஒரு கிலோவின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படும்
  • டின் மீனுக்கான வரி 52 வீதத்தால் குறைப்பு
  • மாசி ஒரு கிலோவின் விலை 200 ரூபாவால் குறைப்பு
  • மிளகாய் தூள் ஒரு கிலோவின் விலை 25 ரூபாவால் குறைப்பு
  • பாண் விலை 6 ரூபாவால் குறைப்பு
  • இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கேஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு
  • வாகனங்களுக்கான வரியை நூற்றுக்கு 15 வீதத்தால் குறைக்க தீர்மானம்
  • அதிகமான நிறுவனங்கள் மீதான வரியை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க தீர்மானம்
  • 1000 சி.சிக்கு குறைந்த மோட்டார் வாகனங்களுக்கு 15 சதவீத வரிக்குறைப்பு
  • மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்களுக்கான வரி முற்றாக நீக்க தீர்மானம்
  • சீமெந்து விலையை 90 ரூபாவால் குறைக்க எதிர்பார்கின்றோம்
  • மதுவரி இரு மடங்கு அதிகரிக்கப்படும்
  • கசினோ வியாபாரிகளுக்கு 1000 வீதம் வரி
  • திருமணப் பதிவு கட்டணம் 1000 ரூபாவாக குறைப்பு
  • விளையாட்டு நிகழ்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதான வரி 1000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு
  • கையடக்கத் தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்யும் அட்டைகளுக்கு காணப்பட்ட 25 சதவீத வரி முற்றாக நிராகரிப்பு
  • பாவனையில் இருந்த அரச வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானம்
  • மாபொல புலமைப்பரிசில் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும்
  • யுத்தத்தில் ஊனமடைந்த இராணுவ வீரர்களுக்கு சிறப்பு சலுகையுடன் கூடிய 5 இலட்சம் கடன் கொடுப்பனவுகள்
  • கைத்தொழில் செய்பவர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்
  • அனைத்து வங்கிகளும் நாட்டில் பின்தங்கிய பகுதிகளில் தமது கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்
  • வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு செலுத்தப்படும் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவால் குறைப்பு
  • கடன் அட்டைகளுக்கான வரி நூற்றுக்கு 8 வீதத்தால் குறைப்பு
  • ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் மிஹின் லங்கா விமான சேவை இணைக்கப்படும்
  • சுகாதாரத்துக்கு 3 வீதம் ஒதுக்கீடு
  • கல்விக்கு 6 வீதம் ஒதுக்கீடு
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கு பஸ் கட்டணம் 50 வீதத்தால் குறைப்பு
  • மத்திய வர்க்கத்தினர் 250 ரூபா கொண்டு வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
Share.
Leave A Reply