சவுதி அரேபியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் தலையை மறைக்கும் துணியை அணியாததால் சர்ச்சை வெடித்துள்ளது. ரியாத்தில் இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் அவரை சங்கடத்திற்குள்ளாக்கியது.

251E162C00000578-2928539-image-a-21_1422377863730அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25–ந் தேதி இந்தியா வந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

3 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா, மனைவி மிச்செல்லுடன், சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் இறுதி சடங்கில் பங்கேற்க சவுதி அரேபியாவுக்கு சென்றார்.

அங்கு ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, சவுதி அரபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை தவிர்த்துக் கொண்டார். மிச்செல் தலையை மறைக்கும் துணி அணியாததால் சர்ச்சை ஏற்படுத்தியது.

obamaa(Outfit change: When the president and Mrs Obama left India on Tuesday, she was dressed in a floral dress. Though her husband wore the same suit and polka-dot tie when they landed in Saudi Arabia, Mrs Obama had changed into a long-sleeve coat and slacks to cover up in the conservative Muslim country)

251DCA3200000578-2928539-image-a-22_1422377887888

சவுதி அரேபியாவில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து மிச்செல் ஒபாமா இறங்கியதும், எப்போதும் அணியும் மேற்கத்திய ஆடையில் இல்லாமல், நீண்ட பேன்ட் மற்றும் பளீர்நிறத்திலான ஆடையுடன் மேல்அங்கி போன்றவையையும் அணிந்திருந்தார்.

251DC02D00000578-2928539-image-a-31_1422383968960மிச்செல் சவுதி அரேபியா சட்டத்தின்படி தலையை மறைக்கும் துணியை மட்டும் அணியவில்லை. விமானத்தில் இறங்கிய ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல்லை வரவேற்க அந்நாட்டு அதிகாரிகள் வந்திருந்தனர்.

அவர்கள் ஒபாமாவை கை குலுக்கி வரவேற்றனர். மிச்செல்லையும் சிலர் கை குலுக்கி வரவேற்றனர். ஆனால் பலர் அவரை கை குலுக்கி வரவேற்பதை தவிர்த்தனர்.

251D83EE00000578-2928539-image-a-27_1422377995980அவர்கள் வெறுமனே தலையை அசைத்து மிச்செல்லை வரவேற்றுவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டனர். இச்சம்பவத்தினால் மிச்செல் சங்கடத்திற்கு உள்ளார். மேற்கத்திய பத்திரிக்கைகள், மிச்செல்லுக்கு சவுதி அரேபியாவில் கிடைத்த வரவேற்பு சொல்லத்தகுந்த அளவில் இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

251DB5C600000578-2928539-image-m-22_1422395183597விமான நிலையம் மற்றும் ஏக்ராமாளிகையிலும் அவரது முகத்தில் புன்னகை காணப்படவில்லை என்று பத்திரிக்கையில் படங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டது.

251D83EE00000578-2928539-image-m-29_1422378005718இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் படம், ஊடகங்களில் மங்கலாக்கி காட்டப்பட்டது என்று சர்ச்சை வெடித்தது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

251DCA3200000578-2928539-image-a-22_1422377887888

ஆனால் மிச்செல் புகைப்படத்தை மங்கலாக்கி அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை என்று சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

சவுதி அரேபியா சென்ற ஒபாமா, அவரது மனைவி மிச்செல் புதிய மன்னர் சல்மானை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த காட்சியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ‘சவுதி டிவி’ வெளியிட்டது. வீடியோ பதிவில் மிச்செல் உருவத்தை மட்டும் மங்கலாக்கி ஒளிபரப்பு செய்யப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.

சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் மிச்செல் உடை அணிந்திருந்ததால் அவருடைய உருவம் வீடியோவில் மங்கலாக்கப்பட்டுள்ளது என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

கட்டுப்பாட்டை தவிர்த்த மிச்செலுக்கு பலர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திடம் அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் கேட்டது.

சவுதி தூதரகம் அமெரிக்காவின் முதன்மை பெண்ணின் புகைப்படம் மங்கலாக்கப்பட்டது என்பது தவறானது. உண்மையை ஆய்வு செய்யுங்கள். பேஸ்புக்கை இல்லை என்று தெரிவித்துள்ளது. சவுதி டி.வி.யும் அவரது படத்தை மங்கலாக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply