இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது.
இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த விமானிக்கு பதிலாக தம் பிடியில் இருந்த கைதியை விடுவிக்க ஜோர்டான் தயாராக இருந்தது.
ஆனால் தமது விமானி உயிருடன் உள்ளார் என்பதை நிருபிக்கும் சான்றுகள் தேவை என்று ஜோர்டான் கேட்டிருந்தது.
இந்த விடியோ, இஸ்லாமிய அரசின் பரப்புரைத் தளம் என்று நம்பப்படும் ஒரு டுவிட்டர் தளம் வழியாக வினியோகிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் விமானி பயணித்த விமானம் இஸ்லாமிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியபின் விமானி பிடிபட்டார்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு பிணைக் கைதிகளை இஸ்லாமிய அரசு அடுத்தடுத்து கொன்றுள்ள நிலையில் இந்த சம்பவம் வந்துள்ளது.
Jordanians holding up photo of pilot after he was captured by ISIS