இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜபருன்னிசாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இது யுவனின் 3-வது திருமணம். இவர்களின் திருமணம் கீழக்கரை அருகே உள்ள கிராமத்தில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யுவனின் குடும்பத்தில் இருந்து தங்கை பவதாரணி மட்டுமே கலந்துக் கொண்டார்.
இந்த திருமணத்தில் இளையராஜாவிற்கு விருப்பம் இல்லாததால் கலந்துக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது யுவன் மற்றும் மனைவி ஜபருன்னிசா தம்பதினர் இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் தலா 10 பவுனில் தங்கச் செயின் அணிவித்திருக்கிறாராம்.
மேலும் சாலிகிராமத்தில் புதியதாக வாங்கியிருக்கும் வீட்டில் இருவரும் தங்கிக்கொள்ளுமாறும் இளையராஜா கூறியிருக்கிறாராம்.
ஜெய்-திரிஷா இணையும் படத்தில் பிரபுதேவா?
08-02-2014
சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களுக்கு பிறகு திரு இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜெய்-திரிஷா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தை திரிஷாவின் வருங்கால கணவர் வருண்மணியன் தயாரிக்கிறார்.
இப்படத்தில் பிரபுதேவா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘எங்கேயும் காதல்’. இப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனமாடியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு இந்தியில் படங்களை இயக்கும் பணியில் பிசியாகிவிட்ட பிரபுதேவா, தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், இப்படத்தின் கதையை கேட்டதும் பிரபுதேவா கண் கலங்கியதாகவும், உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பிரபுதேவா.
மேலும், இப்படத்தில் நடிகை சிம்ரனையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். சென்னை மற்றும் கும்பகோணத்தில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
Neeya Naana 08-02-2015 – VijayTv Gopinath Show