ஊர்காவற்துறை – நாராந்தனை வடக்கு பிரதேச வீடொன்றில் இளம்யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாராந்தனை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காதல் தொடர்பாடல் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறைவான புள்ளி பெற்ற மாணவன் மீது தாக்குதல்! கிளிநொச்சியில் சம்பவம்
22-02-2014
பரீட்சையில் குறைவான புள்ளி பெற்ற ஒன்பது வயது பாடசாலை மாணவனான சிறுவனை உறவினர்கள் மோசமாக தாக்கிய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை செல்லும் வசதிக்காக விஸ்வமடு தொட்டியடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தார்.
இதன்போது பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்தமைக்காக குறித்த உறவினர் இவரை தாக்கி காயப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.