மணமகனுக்கு போதை மருந்து கொடுத்து விட்டு காதலரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். மயக்கம் தெளிந்த மணமகன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கிஷோர் (25) என்பவருக்கும், இந்திரவதி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும்  திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

திருமண நாள் அன்று மணமகன் இரண்டு மணிநேரம் கழித்து திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். அப்போது இந்திரவதிக்கும் திருமணத்திற்கு வந்த மற்றொரு வாலிபருக்கும் திருமணம் நடந்து விட்டது. இதனை பார்த்த கிஷோர் அதிர்ச்சி அடைந்தார்.

கிஷோர் போதையில் இருந்தார் என்று பெண் வீட்டாரும், இந்திரவதி தனது ரகசிய காதலரை திருமணம் செய்து கொள்ள எனக்கு போதை மருத்து கொடுத்துவிட்டார் என்று மணமகனும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டினர்.

இது குறித்து கிஷோர் கூறுகையில், 10 நாட்களுக்கு முன்னதாக எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில்  எனக்கு வெற்றிலையால் செய்யப்பட்ட பாரம்பரிய இனிப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.

அதற்கு பின்னர் என்னால் எப்போதும் போல் இருக்க முடியவில்லை. என்னால் நடக்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் சுவரில் முட்டிக் கொண்டேன். உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.

மயக்கம் தெளிந்த பின்னர் நான் திருமணம் மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் இந்திரவதிக்கும், ஹர்பல்சிங் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்துவிட்டது.

ஹர்பல் சிங் அவருடைய உறவினர். நான் ஒருபோதும் இந்திரவதியை மன்னிக்க மாட்டேன். அவர் தனது ரகசிய காதலரை திருமணம் செய்ய எனக்கு போதை மருத்து கொடுத்துவிட்டார். இதற்கு பெண் வீட்டார் உடைந்தையாக இருந்தனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திரவதியின் சகோதரர் கூறுகையில், ‘கிஷோர் குடிபோதையில் இருந்ததால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இதனையடுத்தே  ஹர்பல்  சிங்கிற்கும்  எனது சகோதரிக்கும் திருமணம் நடைபெற்றது’ என்று தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக கிஷோர் குடும்பத்தினருக்கும், இந்திரவதி குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதோடு, பிரச்னை காவல்துறை வரை சென்றது. காவல்துறையினரின் நடவடிக்கையால் இரு குடும்பமும் சமரசத்துடன் சென்றது.

Share.
Leave A Reply