லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார்.

ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, உள்நாட்டு யுத்தம் காரணமாக 2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து லண்டனுக்கு புலம்பெயர்ந்தவராவார்.

அவரது கணவரான சோதிலிங்கம் செல்லத்துரை (44) தமது பிள்ளைகளின் கல்வி நிமித்தம் அவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்தார்.

இதனையடுத்து செல்லத்துரை தனது 18 வயது மகளான ஹம்சனாவுடன் கடந்த ஒக்டோபர் மாதம் லண்டன் சென்றுள்ளார். இவர்களின் 22 வயது மகன் இலங்கையில் தங்கியிருப்பதுடன் அவர் கணனி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mum-hit-and-run

Share.
Leave A Reply