இந்திய, இலங்கை மீனவர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இன்று காலை தேர் பவனி, திருப்பலி பூஜை மற்றும் கொடி இறக்க நிகழ்சிகளுடன் நிறைவடைந்தது.

நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த திருவிழாவில் இலங்கை இந்திய பக்தர்கள் 7000 பேர் இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை கூட்டுப் பிரார்த்தனை, சிலுவைப்பாதை வழிபாடு என்பன இடம்பெற்றிருந்ததுடன், இன்றைய தினம் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

இலங்கை – இந்திய தமிழர்களின் உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையான அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்ததுடன், வட மாகாண கட்டளைத் தளபதியும் விழாவில் கலந்து கொண்டிருந்தாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்றைய இலங்கை செய்திகள்..

Share.
Leave A Reply