போரில் வென்றுவிட்டோம் என்ற மமதையில் மகிந்த ராஜபக்ஷ ஆடாத ஆட்டம் இல்லை எனலாம். முல்லைத்தீவில் உள்ள பிரபாகரன் வீட்டை சிங்களவர்களுக்கு காண்பித்தார்கள்.
பெரும் சுற்றுலாத் தலமாக மாற்றினார்கள். ஆனால் மகிந்தருக்கு நியூட்டனின் விதி மறந்துவிட்டது போல. இந்த பூமியில் எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும்.
அது இப்போது வேலைசெய்கிறது. மகிந்த ஆடம்பரமாக வாழ்ந்த அலரிமாளிகையை தற்போது எல்லாச் சிங்களவர்களுக்கும், டிக்கெட் போட்டு காட்டி வருகிறார்கள் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்கள்.
மகிந்தர் வீட்டை சுற்றிப்பார்கவேண்டும் என்றால் இலவச டிக்கெட் எடுத்தால் போதும். அவர்களே அழைத்துச் சென்று காட்டுகிறார்கள்.
பெறுமதி மிக்க சந்தன கட்டையில் செய்த சிலைகள். தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஆடம்பர நாற்காலிகள். வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆனால் சிலைகள்.
மேலும் ஆடம்பர நீச்சல் குளம் என்று , ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ. இதனை மக்கள் நிச்சயம் பார்கவேண்டும் என்று, சிங்களவர்கள் தற்போது கூறிவருகிறார்கள்.