இந்தியாவில் ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வரும் குர்மீத் ராம் ரஹிம் சிங் எனும் சாமியார் தனது சீடர்கள் 400 பேரின் விதைகளை அகற்றி ஆண்மை நீக்கம் செய்துகொள்ளத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

47 வயதான குர்மீத் ராம் ரஹிம் சிங், இந்தியாவின் ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சாச்சா ஸ்வ்தா, என்ற சமூக நலன் மற்றும் ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர்.

 9119Untitled-15

உலகெங்கும் சுமார் 5 கோடி பக்தர்களைக் கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு 4கோடி டொலர் (சுமார் 520 கோடி ரூபா) சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பல வர்ண ரீஷேர்ட், ஜீன்ஸ் சகிதம் தோன்றும் ராம் ரஹிம் சிங். சாகச நிகழ்வுகளிலும் ஈடுபடுபவர்.

தன்னைப் பற்றிய திரைப்பட மொன்றிலும் இவர் கதாநாயகனாக நடித்தார். தயாரித்தார்.

தி மெசேஞ்சர் ஒவ் கோட் (எம்.எஸ்.ஜி.) எனும் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பல மொழிகளில் வெளியாகியது.

டில்லிக்கு அருகிலுள்ள குர்கான் நகரில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் 157,000 பேர் பங்குபற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.

இப்படத்தில் சீக்கியர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறி சீக்கிய மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.

ஆனால், கடவுளிடம் நெருங்குவதற்கான வழி எனக் கூறி தனது பக்தர்கள் 400 பேரை அவர்களின் விதைகளை அகற்றிக்கொள்ளத் தூண்டினார் என்பது குர்மீத் ராம் ரஹிம் சிங், மீதான பாரதூரமான குற்றச்சாட்டாக உள்ளது.

ராம் ரஹீம் சிங்கினால் நடத்தப்பமட் வைத்தியசாலையொன்றில் 2000 ஆம் ஆண்டு இந்த விதை அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், இப்போதுதான் இது குறித்த விபரங்கள் வெளியாகிய தாகவும் இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 911945

குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் முன்னாள் சீடரான ஹன்ஸ் ராஜ் சௌஹான் சார்பில் அவரது சட்டத்தரணி நவ்கிரண் சிங் பஞ்சாப் மற்றும் ஹரியானா மேல் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அம்மனுவில் “குர்மீத் ராம் ரஹிம் சிங் தன்னுடைய 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்து உள்ளார். இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளே நடைபெற்று உள்ளது.

ஆண்மை நீக்கம் செய்தால் தான் கடவுளை சந்திக்கமுடியும் என உறுதி அளித்து இந்த காரியத்தை செய்துள்ளார்.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரரான ஹன்ஸ்ராஜ் சௌஹான் என்பவர், தேரா சாச்சா ஸவ்தா அமைப்பில் தனது 16 வயதில் சேர்ந்தார். தற்போது அவருக்கு 31 வயது ஆகிறது. கடந்த 15 வருடங்களாக அந்த அமைப்பில் இருந்து உள்ளார்.

 911947

சௌஹானை இந்த அமைப்பின் தலைவர் குர்மீத்திடம் அவரது பெற்றோர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த அமைப்பில் இருந்து சவுகான் கடந்த 2009 முதல் முழுவதுமாக விலகி விட்டார். அதன் பிறகு அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன என சட்டத்தரணி நவ்கிரண் சிங் தெரிவித்துள்ளார்.

தன்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துவரும் குர்மீத் ராம் ரஹிம் சிங், இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘இந்த குற்றச் சாட்டுகள் முழுக்க, முழுக்க பொய்யானவை.

இதுபோன்ற சத்திரசிகிச்சைக்கு உடன்படும்படி நான் யாரையும், எப்போதும் கேட்டுக் கொண்ட தில்லை.

 911944

அப்படி நான் சொன்னதாக யாராவது நிரூபித்தால் என் தலையை துண்டித்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக இந்தியாவின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) நடத்திய விசாரணையில், விதைகளை அகற்றி விட்டால் கடவுளை காணலாம் என்று உபதேசித்த குர்மீத் ராம் ரஹிம் சிங், தனது ஆசிரமத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களை வைத்து பல சீடர்களின் ஆண்மையை பறித்துள்ளதாக தெரியவந்துள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை ராஜ் சௌஹானின் மனுவை பரிசீலித்த நீதிபதி, வழக்குப்பதிவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

“ஆண்மை நீக்கத்தை பின்பற்றியவர்கள் தங்கள் விதைகள் நீக்கப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து உள்ளனர்.

 911943

யாராவது எதையாவது சொல்கிறார்கள் என்றால் உங்கள் தலையை வெட்ட சம்மதிப்பீர்களா என கேட்டிருந்தார்.

ஆண்மை நீக்கம் செய்ய சம்பந்தப்பட்டவர்கள் சம்மதம் கொடுத்து இருந்தாலும் இது மனிதாபிமானமற்ற செயலே எனவும் நீதிபதி கூறியமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply