ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Wednesday, June 29
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»கலைகள்»பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்
    கலைகள்

    பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்

    AdminBy AdminMarch 3, 2015No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘பிரமிட்’ என்ற வார்த்தை இன்று எகிப்து தேசத்தின் அடை­யா­ள­மாகக் காணப்­ப­டு­கி­றது. எகிப்தை தெரி­யுமோ இல்­லையோ? நிச்­சயம் பிரமிட் பற்றி எல்­லோ­ருமே தெரிந்து வைத்­தி­ருப்­பார்கள். எகிப்து என்­ற­வுடன் நம் கண்­களின் முன்னால் விரி­பவை பிர­மிட்டுக்­கள்தான்.

    பிர­மிட்­டா­னது சாதா­ரண மக்­களை மட்­டு­மல்ல, பொறி­யியல் வல்­லு­நர்­க­ளையும் வியக்க வைக்கும் கட்­டிடக்கலையாகும். ஏழு உலக அதி­ச­யங்­களில் பிர­மிட்டும் ஒன்­றாகும்.

    பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்­ப­குதி சது­ர­மாக இருக்கும். நான்கு சரி­வான முக்­கோணப் பகு­திகள் உச்­சியில் ஒன்­றாக இணையும்.

    எகிப்­தி­யர்கள் கி.மு. சுமார் 2500ஆம் ஆண்­ட­ளவில் மனி­தனின் இறப்­பிற்குப் பிறகும் வாழ்க்கை உண்டு என நம்­பினர். எனவே எகிப்தில் மன்­னர்கள், மகா­ரா­ணிகள், மந்­தி­ரிகள், குரு­மார்கள், இறந்த பின்பு அவர்கள் பயன்­ப­டுத்­திய ஆப­ர­ணங்கள், பொருட்கள் ஆகி­யவை இறப்­பிற்கு பிந்­திய வாழ்­விற்கு அவர்­க­ளுடன் சேர்த்து புதைக்­கப்­பட்­டன.

    இறந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்­கையால் எகிப்­திய மன்­னர்கள் இறந்த பின்பு, அவர்­க­ளது உடல்­களை பதப்­ப­டுத்தி இந்த பிர­மிட்­களில் மம்­மி­க­ளாக வைத்­தனர்.

    மன்னர் உயி­ருடன் இருந்தபோது மன்னர் பயன்­ப­டுத்­திய விலை உயர்ந்த ஆப­ர­ணங்­க­ளா­கிய வைரம், தங்கம்,வெள்ளி மற்றும் உணவு தானி­யங்கள் ஆகி­யவை அவ­ரது இறப்­பிற்கு பிந்­திய வாழ்க்­கைக்­காக அவ­ருடன் சேர்த்து புதைக்­கப்­பட்­டன.

    மன்­னர்கள், மகா­ரா­ணிகள், மந்­தி­ரிகள், மத-­கு­ரு­மார்கள் ஆகிய அனை­வ­ருக்கும் அவர்­க­ளு­டைய தகு­திக்கு ஏற்ப தனித்­த­னியே மன்­ன­ருக்கு அரு­கா­மையி­லேயே பிர­மிட்கள் கட்­டப்­பட்­டன.

    கி.பி. 1879ஆம் ஆண்­டு­களில் சஹாரா பாலை­வ ­னத்தில் பிர­மிட்கள் இருக்கும் பகு­தியில் ஆடு மேய்த்துக் கொண்­டி­ருந்த எகிப்­தியர் ஒரு­வரை பார்த்து பயந்த நரி ஒன்று அருகில் இருந்த பிர­மிட்­டிற்கு அடியில் ஓடி ஒளிந்­துள்­ளது.

    இதை பார்த்து வியப்­ப­டைந்த அந்த எகிப்­தியர், நரி சென்ற வழியில் சென்று பார்த்த போது அங்கு ஒரு சுரங்கம் இருந்­துள்­ளது.

    அந்த சுரங்­கத்­தினுள் சென்று பார்த்­த­போது அங்கு அவர் பிரமாண்­ட­மான அதி­ச­யத்தை பார்த்­துள்ளார். தங்­கத்­தி­னாலும் வைரம் மற்றும் நீலக்­கற்­களால் கட்­டப்­பட்ட மண்­டபம் ஒன்றை அவர் பார்த்­துள்ளார். பின்பு அவர் தான் கண்ட இவ்­வ­திசயத்தை மற்­ற­வர்­க­ளுக்கும் தெரி­வித்தார்.

    அதற்குப் பிறகு பிர­மிட்­டிற்குள் புதைந்­தி­ருந்த  இரக­சி­யங்­களும் மர்­மங்­களும் கொஞ்சம் கொஞ்­ச­மாக வெளி­வ­ரத்­தொடங்கின.

    இந்த பிர­மிட்கள் இரண்­டரை மில்­லியன் சுண்­ணாம்புக் கற்­களை கொண்டு கட்­டப்­பட்­டுள்­ளன. இந்த பிர­மிட்­களில் உள்ள ஒவ்­வொரு கல்லும் 2 தொன் எடை கொண்­ட­தாகும்.

    இதில் நமக்கு ஆச்­சரியம் என்­ன­வென்றால் எகிப்து தேசத்திலுள்ள ஒவ்­வொரு பிர­மிட்டும் அதன் கட்­ட­மைப்பில் 1 டிகி­ரிக்கும் குறை­வாக வட­து­ரு­வத்தின் நேர்­கோட்டில் அமைந்­துள்­ளது.

    எந்­த­வொரு தொழில்­நுட்­பமும் இல்­லாத காலத்தில் இந்த அதி­சயம் எப்­படி என்று வர­லாற்று ஆய்­வா­ளர்கள் ஆச்சரியப்படுகின்­றனர்.

    363022-adminPyramid Sphinx

    இப்பிர­மிட்கள் 4500 ஆண்­டு­க­ளுக்கு முந்­தி­யது என்றும் இதன் அருகே உள்ள ஸ்பிங்ஸ் எனப்­படும் சிலை 12,000ஆம் ஆண்டுக­ளுக்கு முந்­தி­யது என்றும் ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

    ‘டியூட்­ம­கா­மும’ என்ற இள­வ­ர­சனின் சவப்­பெட்­டிதான் முதன்­ மு­தலில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. ‘டியூட்­ம­கா­மும’ இள­வ­ர­சனின் உடல்தான் உலகின் முதல் மம்மி ஆகும். மம்மி என்­பது பதப்­ப­டுத்­தப்­பட்ட உட­லாகும்.

    கீசா, நெக்­ரொப்­போலிஷ் எனப்­படும் கீசா பிரமிட் தொகுதி எகிப்தின் தலை­ந­க­ரான கெய்­ரோவின் எல்லை பகு­தியில் கிசா மேட்­டு­நிலப் பகு­தியில் உள்­ளது.

    பண்­டைய கால நினை­வுச்­சின்­னங்­களை உள்­ள­டக்­கிய இப்­ப­குதி நைல் நதிக்­க­ரையில் அமைந்­துள்­ளது. பழைய கிசா நகரத்திலி­ருந்து 5 மைல் தொலைவில் உட்­பு­ற­மாக பாலை­வனப் பகு­தியில் அமைந்­துள்­ளது.

    இது கெய்­ரோவின் மத்­தி­யி­லி­ருந்து தென்­மேற்காக 15 மைல் தொலைவில் உள்­ளது. இந்த நெக்­ரொப்­போலிஷ் நகரம் பல பிர­மிட்­களை உள்­ள­டக்­கிய தொகுப்­பாக உள்­ளது.

    கூஃபுனின் பிரமிட் எனப்­படும் பெரிய பிர­மிடும், காஃபா பிரமிட் எனப்­படும் சிறிய பிர­மிடும் இவற்­றிற்கு தென்­மேற்கில் 100 மீற்றர் தொலைவில் நடுத்­தர அள­வுள்ள மென்­காவின் பிர­மிட்­களும் இதன் தென்­மேற்கில் 100 மீற்றர் தொலைவில் சில சிறிய பிர­மிட்­களும் உள்­ளன.

    ஸ்பிங்ஸ் எனப்­படும் மனி­தத்­த­லையும் சிங்க உடலும் கொண்ட சிலை இப்­ப­கு­தியின் கிழக்கில், கிழக்கு திசையை பார்த்­த­படி உள்­ளது.

    1156765555Pyramid Sphinx

    இன்­றைய எகிப்­தி­யர்கள்  இந்த ஸ்பிங்ஸ் சிலை காஃப்­ரே­யு­டை­யது என்று நம்­பு­கின்­றனர். இந்த அரச குடும்­பத்து சிலை­க­ளுடன் பல உயர் நிலை அரச அதி­கா­ரி­களின் சிலை­களும் காணப்­ப­டு­கின்­றன.

    ஹெல­னியக் காலத்தில் சீடோனின் அன்­டிப்­பேட்டர் இங்­குள்ள பெரிய பிர­மிட்டை உலக அதி­ச­யங்­களுள் ஒன்­றாக பட்­டி­ய­லிட்ட பின்னர் இப்­ப­குதி உலகப் புகழ் பெற்­றுள்­ளது.

    கிஸா (புணைய) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உய­ர­மா­னது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்­டது 5,90,712 கற்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகக் கம்ப்­யூட்டர் கணக்­கீ­டுகள் சொல்­கின்­றன.

    கற்­களின் எடை ஒவ்­வொன்றும் இரண்டில் இருந்து முப்­பது தொன் வரையுள்ள இந்தக் கற்­களை தூரத்திலிருக்கும் மலைப் பகு­தி­களிலிருந்து எப்­படிக் கொண்டு வந்­தார்கள்?

    உச்­சியை எட்­டும்­போது கற்­களை 400 அடி­க­ளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயி­ருக்க வேண்­டுமே? அவர்­க­ளிடம் கிரேன் மாதிரி எந்­திரம் இருந்­ததா?

    ஒரு லட்சம் தொழி­லா­ளிகள் இரு­பது வருடம் பணி­யாற்­றி­யி­ருந்தால் மட்­டுமே பெரிய பிரமிட் உரு­வா­கி­யி­ருக்கும் என்­பது கட்­டடக் கலை வல்­லு­நர்­களின் கணிப்பு ஆகும்.

    ancient_egypt_FR_1[1]

    இன்று சுற்­றுலா பய­ணிகள் பயன்­ப­டுத்தும் நுழைவு வாயி­லா­னது கி.பி.820 இல் கலிப் -­அல்-­மா­முமின் வேலை­யாட்­களால் தோண்­டப்­பட்ட திரு­டர்கள் ‘ சுரங்­க­மாகும்.

    இந்த சுரங்­கப்­பா­தை­யா­னது ஏறு பாதையை அடையும் வரை சுமார் 27 மீட்டர் தூரம் சென்று இடது புறம் திரும்­பு­கி­றது. ஏனெனில் அப்­ப­கு­தியின் கற்­களை அகற்­ற­மு­டி­யா­ததால் அதை சுற்­றி­யுள்ள மென்­மை­யான சுண்­ணாம்பு கற்­களை சுற்றி சென்று ஏறும் பாதையை அடை­கின்­றது.

    இந்தப் பிர­மிட்­க­ளுக்குள் ராஜா ராணிகள், முக்­கி­யஸ்­தர்கள் ஆகி­யோரின் மறை­வுக்­குப்பின் மம்­மி­க­ளாக, உடல் கெடா­த­வாறு பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

    இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்­கின்­றன. பிர­மிட்­களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்­ஞா­னிகள் சொல்­கி­றார்கள். வீடு­களை சாதா­ர­ண­மாக, சதுர, செவ்­வக வடி­வங்­களில் கட்­டி­ய­வர்கள், பிர­மிட்­களை மட்டும் கூம்பு வடி­வத்தில் கட்­டி­னார்கள்.

    இதனை ஆராய்ச்­சி­யா­ளர்கள், பல ஆண்­டுகள் செய்த பரி­சோ­த­னை­களின் அடிப்­ப­டையில் தரும் விளக்­கங்கள் நம்மை பிர­மிக்க வைக்­கின்­றன.

    பிரமிட் வடிவ அறைக்குள் காய்­க­றிகள், பழங்­களை வைத்தால், மற்ற அறை­களில் வைக்­கப்­பட்ட காய்­க­றிகள், பழங்­க­ளை­விட அதிக நாட்கள் கெடாமல் இருக்­கின்­றன.

    பிரமிட் வடிவக் கட்­ட­டங்­களில் தூங்­கு­ப­வர்­க­ளுக்கு, சாதா­ரண அறை­களில் தூங்­கு­ப­வர்­க­ளை­விட, அதிகம் புத்­து­ணர்ச்சி கிடைக்­கி­றது. பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள்.

    பல ஆண்டுகளான பின்னும் இந்த உடல் கெட் டுப் போகவில்லை. பிரமிட் வடிவ அறைக்குள் இரு க்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடி ப்பதில்லை. கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப் புறத்தி லிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்கு கிறது.

    பிரமிட்டின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிட் டின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் இரகசியம் என்கிறார்கள்.

    பல ஆயிரம் ஆண் டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

     

    egypte

    – பரீட் இக்பால்

    Post Views: 1,124

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    உலக சாதனை நிகழ்த்திய இரண்டரை வயதான கேகாலை மாவட்ட சிறுவன் நுஹான் நுஸ்கி

    June 22, 2022

    கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

    September 19, 2021

    நாம் பேசத்தயங்கும் ‘அந்த’ விசயங்களை தெள்ள தெளிவாக சிலைகளில் குறிப்பிடும் கோயில்

    March 9, 2021

    Leave A Reply Cancel Reply

    March 2015
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    குழந்தை பெற்றெடுத்த 13 வயது சிறுமி; சந்தேகநபர்கள் இருவர் கைது

    June 29, 2022

    மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு

    June 29, 2022

    கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்

    June 29, 2022

    யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் !

    June 29, 2022

    அக்குரஸ்ஸயில் கப்புறாளையின் தலை துண்டிப்பு; சந்தேகநபரின் பெற்றோர் கைது

    June 29, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • குழந்தை பெற்றெடுத்த 13 வயது சிறுமி; சந்தேகநபர்கள் இருவர் கைது
    • மொரட்டுவை – கட்டுப்பெத்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; இருவர் உயிரிழப்பு
    • கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்
    • யாழ். காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் !
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version