இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் நிகழ்வுகளைத் தொடர்ந்து காண்போம்.
இந்திய சுதந்திரத்திற்கு முன் கிழக்கும்-மேற்கும் இணைந்த வங்காளம் முஸ்லிம்கள் பெரும்பான்மையுடைய ஒரு மாநிலமாக (54.3 சதவீதம்), முஸ்லிம் லீக் ஆளும் மாநிலமாக இருந்தது.
அதன் தலைநகராயிருந்த கல்கத்தா, முகமதலி ஜின்னா போதித்த “நேரடி” போராட்டக்களமாக ஆகஸ்ட் 16, 1946-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.
நேரடிப் போராட்டம் துவங்குவதற்கு முன்னர் முஸ்லிம்களை வெறியேற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஒரு வங்காள இஸ்லாமியப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அதுபோன்றதொரு சுற்றறிக்கையில், முஸ்லிம்கள் பயங்கரமான ஆயுதங்களைத் தாங்கி ஆயிரக்கணக்கான இந்துக்களைத் தாக்கிக் கொல்வது போலவவும், கல்கத்தாவின் தெருக்களில் ரத்த ஆறு ஓடுவது போலவும் படங்கள் வெளியிடப்பட்டன.
இன்னொரு வங்காள இஸ்லாமியப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கவிதையொன்று, முஸ்லிகள் கூட்டமாகக் கூடித் தாக்கப் போவதால் இந்துக்களின் தலைகள் உருளப்போவதாகவும் எச்சரித்தது.
இதனைத் தொடர்ந்து இந்துக்கள் படிக்கும் பத்திரிகைகள் பெரும் இந்து-முஸ்லிம் கலவரம் துவங்கவிருப்பதாகச் செய்திகள் வெளியிட்டன.
வெறியேற்றும் படங்களும், சுற்றறிக்கைகளையும் தொடர்ந்து, ஆகஸ்ட் 16 முஸ்லிம்களின் “நேரடி” போராட்ட நாளாகக் குறிக்கப்பட்டது.
முகமதலி ஜின்னாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆகஸ்ட் 16, ரமதான் மாதத்தின் பதினெட்டாவது நாள்.
அந்த நாளில்தான் முகமது நபி பாதர் சண்டையில் (Battle of Badr) பெரு வெற்றி பெற்றார் என்பது அதற்கு முக்கியக் காரணம்.
கல்கத்தாவின் மேயராகவிருந்த எஸ்.எம். உஸ்மான் இந்தப் போராட்ட ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அணி திரண்டு கலந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்தினார். மேலும் வெறியூட்டும் சுற்றறிக்கைகள் முஸ்லிம் லீகினால் வெளியிடப்பட்டன.
“ரம்ஜான் மாதத்தில்தான் குரான் அல்லாவால் அறிவிக்கப்பட்டது என்பதனை முஸ்லிம்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இந்த ரம்ஜான் மாதத்தில்தான் ‘ஜிகாத்’ செய்வதற்கான அனுமதியும் அல்லாவால் அளிக்கப்பட்டது.
இந்த ரம்ஜான் மாதத்தில்தான் வெறும் 313 பேர்கள் கொண்ட இஸ்லாமியப்படை பாதர் போரில் ஹீதனியர்களை (Heathenism – idoltry, which equates Hiduism) வென்றார்கள்.
அதுபோலவே, இதே ரம்ஜான் மாதத்தில்தான் இறைதூதர் முகமது நபியின் தலைமையில் 10,000 பேர்கள் கொண்ட இஸ்லாமியப்படை மெக்காவினைக் கைப்பற்றி, இஸ்லாமிய ஆட்சியை அரேபியாவில் நிறுவியது. எனவே முஸ்லிம் லீகும் அதே புனித மாதத்தில் இந்தப் போராட்டத்தைத் துவக்குவதில் மகிழ்ச்சியடைகிறது”
இன்னொரு சுற்றறிக்கையான “முனாஜத் ஜிகாத்” பிரார்த்தனை நேரங்களில் கல்கத்தாவின் மசூதிகளில் படிக்கப்பட்டது. இந்து காஃபிர்களைக் கொன்று, இஸ்லாமிய ராஜாங்கத்தை நிறுவ வலிமையளிக்குமாறு அல்லாவிடம் வேண்டுகிறது. மேலும் இந்தியாவை உலகின் மிகப் பெரும் இஸ்லாமிய நாடாக ஆக்கவும் அது அல்லாவைக் கோரியது.
முகமதலி ஜின்னா வாளுடன் இருக்கும் படத்துடன் “…உங்களது வாட்களை எடுக்கத் தயாராகுங்கள்….ஓ காஃபிர், நீ ஒன்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளாதே.
உனது அழிவு காலம் நெருங்கி விட்டது. படுகொலைகள் இனித் துவங்கவிருக்கிறது. உங்களுக்கு எதிராக ஒரு பெரும் வெற்றியை அடையத் தயாராக இருக்கிறோம்” என்ற செய்தி தாங்கிய சுற்றறிக்கையொன்று கல்கத்தா மேயரால் வெளியிடப்பட்டது.
“முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வாளுடன் வரும்படி” அழைக்கும் இன்னொரு அறிக்கை, “எங்களுடன் யார் விளையாடுகிறார்கள் என்று பார்க்கலாம்…இரத்த ஆறு பெருகி ஓடும் இங்கே. தக்பீரைச் (அல்லாஹூ அக்பர்) சொல்லிக் கொண்டே வாட்களுடன் நாங்கள் வருவோம். நாளையே உங்களின் இறுதி நாள்” என மிரட்டியது.
வங்காளத்தின் முதலமைச்சராகவிருந்த, காவல் துறையைத் தன் கைவசம் வைத்திருந்த ஹுசைன் ஷாஹித் சுஹ்ராவர்த்தி, இந்த “நேரடி” போராட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு அதனை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
இனி வரவிருக்கும் கலவரத்தில் காவல் துறையின் தலையீடுகள் இல்லாமலிருக்கும் பொருட்டு, கல்கத்தாவிலிருந்த அத்தனை முக்கிய இந்து போலிஸ் அதிகாரிகளையும் வேறு இடங்களுக்கு டிரான்ஸ்பர் செய்த சுஹ்ராவர்த்தி, கல்கத்தாவின் இருபத்து நான்கு காவல் நிலையங்களில் இருபத்தி இரண்டில் முஸ்லிம்களை பொறுப்பாளர்களாக நியமிக்கிறார்.
மீதமிருந்த இரண்டு இடங்களும் ஆங்கிலோ-இந்தியர்களின் பொறுப்பில் விடப்பட்டன. ஆக, இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை மிகத் துல்லியமான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டது.
கிரிமினல்களையும், கொலைகாரர்களையும் ஒன்று திரட்டிய முஸ்லிம் லீக், அவர்களுக்குச் சகலவிதமான பயங்கர ஆயுதங்களையும் வழங்கியது. “நேரடி”ப் போராட்ட நாளன்று முஸ்லிம் குண்டரகள் ஈட்டி, வாள், கோடாலிகள், துப்பாக்கிகள் இன்னபிற பயங்கர ஆயுதங்களை ஏந்தி நகரைச் சுற்றி வரத் துவங்கினார்கள்.
வெள்ளையரான போலிஸ் சூப்பிரிண்டெண்டண்ட் “நேரடி”ப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்த முஸ்லிம்களை ஹவுரா பாலத்தில் தடுத்து நிறுத்தினார்.
அவர்களிடமிருந்து “தடிகள். ஈட்டிகள், கத்திகள், கோடாலிகள், இன்னும் எரிக்கப்படாத தீப்பந்தங்கள், காலியான சோடா பாட்டில்கள், மண்ணெணை நிரம்பிய தகர டின்கள், வீடுகளை எரிப்பதற்கு உபயோகிக்கப்படும் எண்ணையில் ஊறிய துணிப்பந்தங்கள்….” எனப் பல பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினார்.
முஸ்லிம்களிடையே “நேரடிப்” போராட்ட உரையை நிகழ்த்திய முதன் மந்திரி சுஹ்ராவர்த்தி அவர்களைக் கலவரத்தில் ஈடுபடும்படி நேரடியாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என உணர்த்தினார்.
காவல் துறையோ அல்லது ராணுவமோ அவர்களைத் தடுக்காது எனவும் அவரது அமைச்சகம் அதனைக் கண்டும் காணாமலிருக்கும் என்றும் முஸ்லிம்களுக்கு உணர்த்தப்பட்டது.
“நேரடிப்” போராட்ட ஊர்வலத்தில் இறுதியில் பெரும் முஸ்லிம் குண்டர்கள் கூட்டம் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து வன்முறையைத் துவங்கியது.
கொள்ளையும், கொலையும், வீடுகளை எரிப்பதுவும் கண்மூடித்தனமான வெறியுடன் செய்யப்பட்டது. இதில் தலையிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்ட போலிஸ்காரர்கள், இந்து மற்றும் சீக்கியர்களின் வீடுகளும், வியாபாரத்தலங்களும் கொள்ளையடிக்கப்படுவதை மவுனமாக வேடிக்கை பார்த்தார்கள்.
போலிஸ் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற முதல் மந்திரியான சுஹ்ராவர்த்தி அதனைத் தன்வசம் எடுத்துக் கொண்டு, கலவரங்களைத் தடுக்க முயலும் போலிஸ்காரர்கள் அதனை உடனே நிறுத்தும்படி உத்தரவிட்டார்.
முஸ்லிம் கொலைகார, கொள்ளைக்கார கும்பல்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சுஹ்ராவர்த்தி, எதிர்த்துத் தாக்கும் இந்துக்களின் மீதான நடவடிக்கையை உடனடியாக எடுக்க போலிஸ்காரர்களை வலியுறுத்தினார்.
உதாரணமாக, செஞ்சிலுவைப் பட்டைகளை அணிந்து கொண்டு கொலை, கொள்ளையில் ஈடுபட்ட எட்டு முஸ்லிம்களை இன்ஸ்பெக்டர் வாதே என்பவர் கைது செய்தார். அவர்களை உடனடியாக விடுவிக்கும்படி போலிஸ் கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தரவிடுகிறார் சுஹ்ராவர்த்தி.
முஸ்லிம்கள் மற்ற முஸ்லிம்களின் கடைகளைத் தவறுதலாக எரித்துவிடக்கூடாது என்பதற்காக அந்தக் கடைகளின் மீது “முஸல்மான் கடை – பாகிஸ்தான்” என எழுதி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. பல இந்துப் பத்திரிகை அலுவலகங்களும் தாக்கப்பட்டு அவற்றை எரிக்க முயன்றார்கள்.
நெருப்பை அணைக்க வந்த தீயணைக்கும் படை இந்துக்கள் வீடுகளை தீயிலிருந்து காக்க விடாமல் தடுக்கப்பட்டது. இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரிகளும், பள்ளிகளும், மாணவர் விடுதிகளும் முஸ்லிம்களால் தாக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டன.
இந்தச் சம்பவங்களை நினைவு கூறும் லாகூர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி கோஸ்லா, “தெருக்களெங்கும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்தன….இந்துக் குழந்தைகள் கூரைகளின் மீதிருந்து தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்…பல குழந்தைகளும், மற்றவர்களும் கொதிக்கும் எண்ணை ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்டார்கள்….இந்துப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் பின்னர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள்…”
முஸ்லிம் வெறியர்களின் மனிதத்தன்மையற்ற இந்த வெறித் தாக்குதல்கள் தொடர்ந்து ஒன்றரை நாட்களுக்கு நடத்தப்பட்டன.
எதிர்பாராத இந்தத் தாக்குதல்களினால் அதிர்ச்சியடைந்திருந்த இந்து மற்றும் சீக்கியர்கள் இரண்டாம் நாளிலிருந்து முஸ்லிம் குண்டர்களை எதிர்த்துத் தாக்கத் துவங்கினார்கள்.
நிலைமை கட்டுக்கடங்காக நிலைக்குச் சென்றிருந்தது. இருப்பினும் இந்து/சீக்கிய எதிர்த் தாக்குதல்கள் முஸ்லிம்களிடையேயும் பெரும் அழிவினை ஏற்படுத்தின. முஸ்லிம் தலைவர்களே எதிர்பாராத வகையில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள்.
65 சதவீத இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகளும், 20% முஸ்லிம்களின் சொத்துக்களும் இந்தக் கலவரத்தில் எரிந்து சாம்பலாயின.
தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு அழிவுகள் நடை பெறாத வருத்தத்திலிருந்து முஸ்லிம் தலைவர்கள் எப்போதும் போல அடுத்தவர்கள் மீது பழியைச் சுமத்தும் தங்களின் வழக்கமான செயலைத் துவங்கினார்கள். இந்தக் கலவரங்கள் காங்கிரஸ்காரர்களால் செய்யப்பட்டதாக கதைகள் பரப்பப்பட்டது.
கல்கத்தாவினைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ஆம் தேதி பம்பாயிலும் முஸ்லிம்கள் கலவரத்தைத் துவங்கினார்கள். பல நாட்களுக்கு நடந்த பம்பாய் கலவரங்களில் இருபக்கத்திலும் இரு நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.
(தொடரும)
மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்