வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

உணவக உரிமையாளரான இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேற்றிரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் இருந்து அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவரது சடலத்துக்கு அருகில் வெற்றுத் தோட்டாக்களும், கைப்பை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னர் வவுனியாவில் கேபிள் தொலைக்காட்சி சேவையை நடத்திய இவர், நாடாளுமன்றத் தேர்தலில் ரெலோ சார்பில் போட்டியிட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

vavuniya_muder_01vavuniya_muder_02

Share.
Leave A Reply