கடந்த பெப்ரவரி 17ம் திகதி பிரித்தானிய பள்ளியை சேர்ந்த ஷாமினா பேகம்(Shamima Begum Age-15), கதீஜா சுல்தானா(Kadiza Sultana Age-16) மற்றும் அமீரா அப்பாஸி (Amira Abase Age-15) ஆகிய மாணவிகள், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறினர்.
பிரித்தானியாவிலிருந்து துருக்கியின் எல்லைப் பகுதிக்கு பறந்த இந்த மூன்று மாணவிகளின் முகங்களும் விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
எனினும் இவர்கள் மூவரும் நூதனமாக தப்பி சென்றதாகவும், இவரை ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் இஸ்தான்புல்லில் இருந்து காரில் ஏற்றி கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர்கள் மூவரும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துவிட்டதாகவும், அதில் அமீரா தீவிரவாதி ஒருவரை மணமுடித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அமீராவை பற்றி அவரது பள்ளி தோழிகள் சிலர் பேட்டியளித்துள்ளனர்.
அமீரா குறித்து மாணவி ஒருவர் பேசியதாவது, அமீரா மிகவும் நன்றாக படிக்கும் மாணவி. அறிவியல் பாடத்தில் என்றுமே முதலிடத்தை பிடிப்பவள்.
எல்லோரும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை தன்மை கொண்டவள். ஆனால் அவள் இவ்வாறு செய்ததை சற்றும் எதிர்ப்பாக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அமிரா எத்தியோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து வந்ததாகவும், சில நாட்களாகவே அவள் எந்த நேரமும் மடிக்கணணியும் கைப்பேசியுடனும் இருந்தது சந்தேகத்தை எழுப்பியது என அவளது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தன் மகள் இவ்வாறு மாறியது தனக்கு மிகவும் வேதனையளிப்பதாக அமீராவின் தந்தை உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.