நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவரின் ஆணுறுப்பு மிகப் பெரியதாக இருப்பதால் விவாகரத்துக் கோரி விண்ணப்பித்துள்ளார்.
நைஜீரியாவின் ஸம்பரா மாநிலத்தைச் சேர்ந்த இப்பெண் அலிஸ மெய்ஸினரி என்பவரை திருமணம் செய்து ஒரு வாரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
தனது கணவரின் பெரிய ஆணுறுப்பு காரணமாக பாலியல் உறவில் ஈடுபடும்போது தான் மிகுந்த வலியை அனுபவிப்பதாகவும் விவகாரத்து கோருவதற்கு இது மாத்திரமே காரணம் எனவும் இப்பெண் தெரிவித்துள்ளார்.
இப்பெண் ஏற் கெனவே வேறொருவரை திருமணம் செய்து 3 பிள்ளைகளுக்கு தாயானவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது திருமண வாழ்க்கை முறிவடைந்த பின்னர் அலி மெய்ஸினரியை தான் திருமணம் செய்ததாக நீதிமன்றத்தில் இப்பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிய கணவரின் வீட்டுக்குச் சென்ற பின்னர் இப்பெண் பிரச்சினைகளை எதிர்கொண்டார்.
இது குறித்து இப்பெண் தெரிவிக்கையில், “என்னுடன் எனது கணவர் பாலியல் உறவில் ஈடுபட்ட போது நான் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குப் பதிலாக கடும் வலியே ஏற்பட்டது.
இதனால் எனது தாயார் எனக்கு மருந்திட்டார். பின்னர் இரண்டாவது தடவை பாலியல் உறவில் ஈடுபட முயற்சித்தபோதிலும் எனக்கு கடும் வலி ஏற்பட்டது.
அதன்பின்னர்தான் கணவரின் மிகப் பெரிய உறுப்பு காரணமாக இத்திருமண வாழ்க்கையைத் தொடர முடியாது என்பதை நான் உணர்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை தான் பெரிய அளவிலான ஆணுறுப்பை கொண்டுள்ளதை அலி மெய்ஸினரி மறுக்கவில்லை.
ஆனால், திருமணத்தின்போது மனைவிக்கு தான் வழங்கிய “மஹர்” பணத்தை திருப்பிக்கொடுத்தால் மாத்திரமே விவகாரத்துக்கு சம்மதிக்க முடியும் என அவர் நீதின்றத்தில் தெரிவித்தார்.