பிரான்ஸ் புலிகளின் உட்கட்சி பிரச்சினையின் எதிரொலி; புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர் மேத்தாவின் மண்டை உடைப்பு..!! இது எப்படியிருக்கு?)

புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர் மேத்தாமீது மர்ம நபரொருவர் இரும்புக் கம்பிகொண்டு கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்.

தாக்குதலை நடத்தியவர் தன்மீது இரும்புக் கம்பியால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர் மேத்தா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது புலிகளின் விநாயகம் மற்றும் நெடியவன் குழுக்களுக்கிடையே உள்ள பிரச்சினையின் எதிரொலியாகவும், பிரான்ஸ் புலிகளுக்கிடையே உள்ள நிதி சம்பந்தமான உட்கட்சி மோதலின் தொடர்ச்சியாகNவு நடைபெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவராகிய மேற்படி மு.மேத்தா என்பவர் புலிகளின் அனைத்துலக குழுவின் பிரான்ஸ் தலைவர் என தெரிய வருகின்றது.

பிரான்ஸ் புலிகளின் உட்கட்சிப் பிரச்சினையின் எதிரொலியாகவே இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக சாட்சியங்களுடன் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், பிரான்ஸ் புலிகளால் இயக்கப்படும் ரி.ரி.என் தொலைக்காட்சி வழமைபோல்

“இது சிறீலங்கா அரசினதும், அதன் கைக்கூலிகளினதும் திட்டமிட்ட ஒரு செயல்” என்று விவரண செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து புலிகளால் இயக்கப்படும் ரி.ரி.என் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியினை கீழே வீடியோவாக காண்க…

Share.
Leave A Reply