சவுதி அரேபியாவில் 100 வயது தாத்தா ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்துடன் நடந்த திருமண ஊர்வலத்தில் 100 வயது மணமகன் நடனமாடியபடியும் கை தட்டியபடியும் வந்து அனைவரையும் ஆச்சரிய படவைத்தார்.அவர் மணமகள் முன் அழைத்து செல்லப்பட்ட போது மிக மகிழ்ச்சியாக தோன்றினார்.
மணமகள் சந்திப்புக்காக அழைத்து செல்லபட்டபோது மாப்பிள்ளையின் விருந்தினர்கள் நடனமாட அழைத்து இந்த யூடியூப் வீடியோ படம் உள்ளூர் செய்தி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.ஆனால் அந்த பத்திரிகை திருமணம் எங்கு நடைபெற்றது மற்றும் மணமகளின் வயதை குறிப்பிட வில்லை.
கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படும் சவுதியில் 100 வயது தாத்தா ஒருவர் திருமணத்திற்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளார். இந்த திருமண வீடியோ தற்போது சமூக இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
எட்டுத்திக்கும் மியாவ்… மியாவ்… பூனைத்தீவு
05-03-2014
தெற்கு ஜப்பான் பகுதியை சேர்ந்தது ஆயோஷிமா தீவு. இந்த் தீவு சுற்றாலா தலமாக உள்ளது. இங்கு மீன் பிடிப்பது தான் பிரதான தொழில். இங்கு மனிதர்களை விட பூனைகளை அதிகமாக உள்ளன.
மீன்பிடிக்க ஜப்பான் மீனவர்கள் தீவிற்கு வந்தபோது, அவர்களுடன் வந்த பூனைகள் அங்கேயே தங்கிவிட்டன. இந்த தீவில் மொத்தம் 20 நபர்களே குடியிருந்துவருகிறார்கள். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட பூனைகள் காணப்படுகின்றன.
இந்தப் பூனைகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பார்க்கும் இடங்களில் எல்லாம் பூனைகள் ராஜ்யம்தான் பொழுதுபோக்கிற்காக வரும் சுற்றுலாப்பயணிகள் அந்த பூனைகளுக்கு உணவளித்து மகிழ்கின்றனர். அந்தபகுதி தற்போது ஜப்பானிய மக்களால் பூனைகள் தீவு என்று அழைக்கப்படுகிறது.