இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு வடக்கு -கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி-யின் விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விடயங்களைக் கவனிப்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினரைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
புதிய அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள போதிலும் அதற்குரிய நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சனையைத் தொடர்தவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டியதன் அவசியம் பற்றியும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனவர்கள் விவகாரம் என்பன குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து உதவ வேண்டும் என்றும் கோரியிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சுக்களின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது பற்றி விவாதிக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், இலங்கை வருகின்ற இந்தியப் பிரதமர் இலங்கை அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணியாற்றிய போது உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவிடத்திற்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய அரிவரிடிகளான கூட்டமைப்பினர் நீண்ட காலமாக இந்தியா மூலம் தங்களுக்கு எதாவது கிடைக்குமா என “பிச்சை பாத்திரம்” ஏந்திக் கொண்டிருக்கினறார்கள்.
ஆனால்.. சிறிலங்கா அரசை விட ஈழத் தமிழர்களுக்கு எதுவுமே கிடைத்து விடக் கூடாது என்பதில் இந்தியாவே முதல் எதிரியாக செயல்ப்படுகின்றது.
சர்வதேச சமூகம் நமக்கு எதாவது செய்ய முன்வந்தாலும், இந்தியா அதற்கு தடையாக செயல்படும் என்பது கடந்த காலங்களில் நாம் கற்றுக்கொண்டு பாடம்.
இந்தியாவையும், கூட்டமைபினரையும் தமிழர்கள் இனிமேலும் நம்பியிருப்பார்களானால் இருப்பதும் இல்லாமல் போகும், நடப்பதும் நடக்காமல் போகும், கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.
சம்பந்தன் பி.பி.சி தமிழோசைக்கு அளித்த பேட்டி
சுஸ்மாவுக்கு இராப்போசன விருந்தளித்தார் மங்கள – சம்பந்தன், சந்திரிகாவும் பங்கேற்பு
07-03-2014
செய்திகள் இரண்டுநாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு,சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.
இந்த இராப்போசன விருந்தில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், “இந்திய வெளிவிவகார அமைச்சராக முதல்முறையாக சிறிலங்காவுக்கு வந்துள்ளேன். ஆனால் சிறிலங்கா எனக்கு புதியது அல்ல. நான் இங்கு பலமுறை வந்துள்ளேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இந்த அழகிய தீவுக்கு வந்திருக்கிறேன்.
முதலில் நான் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், எனக்கும் எனது குழுவினதுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அளித்த விருந்துக்காகவும் எனது உண்மையான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று ஹோலி பண்டிகை. ஹோலி ஒரு நிறங்களின் விழா என்பதை அறிவீர்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த விழாவைக் கைவிட்டு விட்டு நாங்கள் வந்திருக்கிறோம்.
இந்த பண்டிகை வசந்த காலத்தின் வருகையின் குறியீடாகும். மகிழ்ச்சியின் முன்னறிவிப்பாகும்.
எமது இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலையின் பிரதிபலிப்பாக இது இருக்கும் என நம்புகிறேன்.
ஹோலி இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பல கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
அண்மையில் சிறிலங்காவிலும் இந்தியாவிலும், நடந்த தேர்தல்களில் மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்தது வரலாற்றில் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது இருதரப்பு உறவுகளில் புதிய ஊக்கத்தைக் கொண்டு வந்துள்ளது.
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, புவியியல், கலாசார ரீதியாக பழின்னிப் பிணைந்துள்ளன.
இந்த உறவுகள் அயல்நாடு, நண்பர்கள் என்பதைக் கடந்து முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.