யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும் சாம்ஜெயவேல் பானுமதி ஆகிய காதல் ஜோடியினருக்கே இந்த வினோத திருமணம் யாழ். வல்வெட்டித்துறையில் ரேவடி கடற்பரப்பில் இடம்பெற்றது.
குறித்த இந்த நிகழ்வு மாலை 5 மணியளவில், உல்லாச பயணிகளுக்கென யாழில் வடிவமைக்கப்பட்டு, வல்வை கடலில் சேவையிலீடுபடும் “Valvai Blues Boat” என்னும் சிறிய உல்லாசப் படகில் இடம்பெற்றது.
குறித்த இந்த வினோத திருமணம் சுற்றத்தவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.