நாங்கள் நிறைவேற்று சபையில் அரசியல் கைதி கள் தொடர்பாக அறிக்கை தரக் கோரினோம். தற்போது அது கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, விடுதலை புலிகளின் கே.பி., தயாமாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர், கருணா போன்றவர்கள் சுதந்திரமாக இருக்கின்றபோது இவர்களின் கீழ் இருந்த அப்பாவிகள் தடுப்பில் இருப்பது நியாயமற்றது. இதனால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் காணிப்பிரச் சினைக்கும் தீர்வுகாணப்பட வேண்டும் என மக்கள் விடுதலை
முன்னணியின் தலை வர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களித்து ஜனாதிபதியைத் தெரிவு செய்துள்ளார்கள். கடந்த ஆட்சியல் ஊழல் அடக்குமுறை நிறைந்த ஆட்சியாகும்.
இதனாலேயே மக்கள் துணிந்து வாக்களித்த்து இந்த ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளார்கள். வடக்கு மக்கள் அக்கறையுடன் செயற்பட்ட தேர்தல் இதுவாகும்.
வடக்கிலோ தெற்கிலோ அல்லது வேறு எங்காவது இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த இனவாதத்தாலேயே பல அழிவுகளை சந்தித்துள்ளோம்.
தமிழ் சிங்கள முஸ்லிம் உட்பட அனைத்து மக்களிடம் தேசிய ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஜனநாயகத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி அரசியல் அமைப்புமுறை மாற்றப்பட வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலத்திலும் மகிந்த ஆட்சி காலத்திலும் திருத்தம் கொண்டுவர முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. எனினும் இதனை மாற்றுவதற்காக பொதுக் கூட்டணி அமைத்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்துள்ளார்.
தற்போதைய சூழலில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மாற்றுவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டு பேசப்படுகிறது.
மேலும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கவும் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாமும் இதை மாற்றியமைக்கவும் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றில் விசேட அரசியலமைப்பைக் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைகளை கவனத்தில் முன்னெடுத்து செல்வதில் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது.
நாங்கள் நிறைவேற்று சபையில் கலந்துரையாடியுள்ளோம். அரசியல் கைதிகள் தொடர்பாக அறிக்கை தரக் கோரினோம். தற்போது அது கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த அரசில் விடுதலை புலிகளின் கே.பி. தயாமாஸ்ரர் ஜோஜ் மாஸ்ரர் கருணா போன்றவர்கள் சுதந்திரமாக இருக்கின்றபோது இவர்களின் கீழ் இருந்தவர்கள் தடுப்பில் இருப்பது நியாயமற்றது.
இதனால் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல் காணிப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்பட வேண்டும்.
இதற்கு குழு ஒன்றை அமைத்து தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏனைய இடங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் யுத்தம் முடிந்தும் மக்கள் முகாம்களிலும் உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் தங்கி வாழ்கிறார்கள். இவர்களுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட வேண்டும். விவசாய கடற்றொழில் பூரணமாக செய்ய அனுமதிக்க வேண்டும்.
கடற்றொழிலை பொறுத்தவரையில் எல்லை தாண்டும் பிரச்சினை வடபகுதியில் அதிகமாக உள்ளது. இந்தியாவின் அத்துமீறல் வடபகுதி கடல்வளத்தை சூறையாடுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு அரசு முகம்கொடுக்காது பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து செயற்படுகிறது. இது 100நாள் இடைக்கால அரசாங்கம் மட்டுமே. நிலையான அரசாங்கம் அமைந்தாலே இங்குள்ள பிரச்சினை நிலையான மாற்றம் ஏற்படும். அதுவரை இந்த அரசை நம்பமுடியாது என்றார்.
இதேவேளை இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பாக கேட்கப்பட்டபோது
நாம் இதுவரை அறியவில்லை ஆராய்ந்து உண்மையை கண்டறிந்தபின் இது தொடர்பாக தெரிவிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த அரசாங்கத்திடம் காணமற்போனவர்கள் சரணடைந்தவர்கள் தொடர்பில் பாரிய பொறுப்புக்களை கொண்டதாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
(06-03-2014) இலங்கை செய்திகள்