ஸ்லிமான்: வீடு வாங்கினால் மணப்பெண் இலவசம் என்ற இந்தோனேசிய விளம்பரம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

அந்த விளம்பரத்தில் இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரத்தின் கடைசி வரிகளில் “ஒரு அரிய வாய்ப்பு” இந்த வீட்டை வாங்குபவர் அதன் உரிமையாளரிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அத்துடன் வீட்டின் உரிமையாளரான 40 வயது நிரம்பிய வீனா லியாவின் நிழற்படமும் வெளியாகி இருந்தது.

இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய நாட்டின் அனைத்து ஊடகங்களும், அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி படை எடுத்தன.
indhonesia2

அந்நாட்டு போலீசாரும் இது மோசடி விளம்பரமாக கருதி லியாவை அணுகினர். அப்போதுதான் இது லினாவின் நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கரின் வேலை என்று தெரிந்தது.

போலீசாரிடம் இத்தகைய விளம்பரத்தை தான் வெளியிட கூறவில்லை என்று கூறிய லினா, தனது ரியல் எஸ்டேட் நண்பரிடம் வீட்டை விற்பது குறித்து விளம்பரப்படுத்துங்கள்.

அதே சமயம் வீட்டை வாங்க விருப்பமுள்ளவர், திருமணம் ஆகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ இருப்பதுடன், மனைவியையும் தேடுபவராக இருந்தால் தனக்கு தெரியப்படுத்துங்கள் என்று மட்டும் கூறியதாகவும் லினா போலீசாரிடம் தெரிவித்தார்.

அவ்வாறு யாராவது வீட்டை வாங்க முன்வந்தால், விதவையாக இருக்கும் தானும் அந்நபருடன் பேச்சு நடத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தாகவும் லினா கூறியுள்ளார்.

ஆனால் ஒரு போதும் இந்த விவரத்தை ஆன் லைனில் வெளியிடுமாறு தான் கூறவில்லை என்றும் லினா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply