குவைத்தில் பலியான மட்டு யுவதியின் சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) எனும் யுவதியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குறித்த யுவதி கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார்.

batti1இவரை காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு அனுப்பியிருந்தார்.

இந்த யுவதி கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.

unnamed-13-449x600இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

unnamed-13-449x600பின் இந்த யுவதியின் குடும்ப உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்திற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவருக்க நான்கு வயதுடைய குழந்தை உண்டு எனவும், கணவர் மரணித்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Share.
Leave A Reply