அயர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியரின் குழந்தை பிறந்த ஏழே வாரங்களில ஹலோ சொல்லி பெற்றோரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

டோனி-பால் மெக்கேன் தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தையான சில்லியன், சில வாரங்களிலேயே தாயைப் பார்த்து சிரிக்க தொடங்கியது.

துறுதுறுவென அலைபாயும் மகனின் கண்களை பார்த்து பரவசப்பட்ட டோனி, ஏழாவது வாரத்தில் மகனின் மழலை குறும்புகளை வீடியோ காட்சியாக படம் பிடிக்க ஆரம்பித்தார்.

அப்போது, கன்னங்களில் குழி விழ, தனது வாயை காட்டி சிரித்த சில்லியன், திடீரென ´ஹலோ´ என்று சொல்லியுள்ளான்.

தனது கண்களையும், காதுகளையும் தன்னால் நம்ப முடியாத டோனி, தனது கேமராவில் பதிவான காட்சிகளை ஓடவிட்டு பார்த்தார். பின்னர், தான் அது கனவில்லை என்பது தெரியவந்தது.

நான் அந்த காட்சியை வீடியோவாக எடுத்திருக்காவிட்டால் நான் சொல்வதை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள் என்று கூறிய டோனிக்கு 12, 11, 8 வயதில் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ஆனால், நான்காவது குழந்தையான சில்லியன், பிறந்த ஏழே வாரங்களில் ´ஹலோ´ சொல்லும் அந்த வீடியோவின் மூலம் தனது தாய் டோனியை உலகப் பிரபலமாகி விட்டான்.

Share.
Leave A Reply