paliநமது பிரதேசங்களை அடையாளப்படுத்தி, நமக்குப் பல வழிகளில் உதவியாகவுமிருக்கும் பாரம்பரிய உயிரினங்கள் படிப்படியாய் அழிந்து வருகின்றது. அந்த வகையில்..

இந்தியாவின் வட கிழக்கிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் வாழும் அரிதான பல்லினத்துக்கே இந்தக் கதி நேர்ந்துள்ளது.

அந்தப் பல்லி 20 இலட்ச ரூபா வரை விலை போகிறது என்று பரவிய தகவல்களால், அம்மாநிலத்திலுள்ள பரந்த மலைக்காடுகளில், பாரிய விருட்சங்களில் குடும்பம் குடும்பமாய் தங்கியிருந்து பல்கிப் பெருகி வாழும் ‘டொகாய் ஜீகோ’ (lezard gecko tokay) என்ற பெயருடைய அந்தப் பல்லிகளை வேட்டையாடும் வேலையில் அங்குள்ள பலரும் தத்தம் வேலை வெட்டிகளை விட்டுவிட்டு மும்முரமாய் இறங்கிவிட்டார்களாம்.

Gecko-queue-grasse-Hemitheconyx-caudicinctus-lézards-nocturnes-alimentation-maintien-reproduction-caractère-comportement-NAC-reptiles-animaux-animogen-31நம் நாட்டு உடும்புகளையொத்து ஒன்றரையடி நீளத்தில் அரைக்கிலோ வரை எடையில் காணப்படும் இப்பல்லிகள், உடும்புகள் போல் கறுப்பும் சாம்பலும் கலந்த நிறத்திரல் இராமல், நீலம் அல்லது சாம்பல் நிற உடலில் மஞ்சள் நிறப் புள்ளிகளோடு பார்க்க மிக அழகாக இருக்குமாம்.

இந்தப் பல்லியை அரைத்து மருந்தாக்கிச் சாப்பிட்டால், ஆண்மையில்லாதவர்களுக்கு வீரியமுண்டாகும்.

குழந்தைகள் பிறக்கும். முற்றிய புற்றுநோய் இருந்தாலும் குணமாகும். கொடிய எயிட்ஸ் நோய்க்கும் நிவாரணம் தரும் ஒரே ஒளடதம் இதுதான் என்று தினம் தினம் வெளியாகும் தகவல்கள் தான் இவைகளுக்கு எமனாகிவிட்டன.

அதில் அறிவியல் ரீதியாக எந்த வண்மையும் இல்லையென மருத்துவர்கள் அறிவித்தாலும் கூட, ஆசிய நாடுகளில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் வரை பரவிய இந்தத் தகவல்களால் இது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

இந்தப் பல்லியானது குட்டியாக, ஓர் அடிக்கும் கொஞ்சம் கூடுதல் நீளமுடையதாயிருந்து, 200 கிராம் எடையிருந்தாலும் போதும், அதற்கும் விலை 20 இலட்சம் ரூபா.

ஐந்து பல்லிகள் வரை தேடிப்பிடித்தால் கோடீஸ்வரராகி விடலாமென்று பேராசையோடு பலரும் மணிப்பூர் மலைக்காடுகளில் அலைந்து திரிகிறார்களாம்.

இவர்களில் வெளிநாட்டுக் கடத்தல்காரர்களும் அங்குகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் 70 பல்லிகள் வரை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனவாம்.

என்ன விதத்தில் முயன்று தேடினாலும் பலருக்கும் குட்டிப் பல்லிகள்தான் கிடைக்கின்றன. இப்படிக் கிடைத்தாலும் விடுவதில்லை.

மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி விவசாயிகளிடம் இவற்றை ஒப்படைத்து, கண்கலங்கவிடாமல் சீராட்டிப் பாராட்டி வளர்த்து ஆளாக்கித் தருமாறு வேண்டுகிறார்களாம்.

அந்த மலைக்காட்டுச் சூழலில் வளரும் பல்லிகள்தான் ஆரோக்கியமாய், புஷ்டியாய் இருக்கின்றனவாம்.

குறிப்பிட்ட எடையளவு வளர்ந்தவுடன் வந்து வாங்கிப் போகிறார்கள். இப்படிப் பல்லி வளர்ப்பவர்களுக்கும் ஆயிரக்கணக்கில் கூலி கிடைக்கிறதாம். இதனால் பலர் விவசாயத்தைக் கைவிட்டு பல்லி வளர்ப்பில் இறங்கி விட்டார்களாம்.

இந்த ரீதியில் போனால் தேசிய உயிரினங்களிலல் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்தப் பல்லியினமே அழிந்து போய்விடுமென கவலை தெரிவிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள், அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இதனையும் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்திருக்கிறார்களாம்.

Share.
Leave A Reply