தாய்லாந்தில் கொதிக்கும் எண்ணெய்யில் தியானம் செய்த புத்த துறவியை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தாய்லாந்தின் லம்பு(Lamphu) மாகாணத்தை சேர்ந்த நாங் புவா(Nong Bua) என்ற புத்த துறவி மிகவும் சக்தி வாய்ந்த துறவியாக அப்பகுதியில் கருதப்படுகிறார்.
இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்தும் சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுவதுடன், அவை அதிக விலைக்கும் விற்கப்படுகிறது.
மேலும் அவரை பின்பற்றுபவர்கள் அவர் கைப்பட கொடுக்கும் தாயத்துக்கள் அல்லது துணி துண்டுகளை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் எண்ணெய்யில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில்(Youtube) பகிரபட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து பல விவதாங்கள் எழுந்ததுடன், இது சாத்தியமில்லை என்றும் ஏதோ தந்திர வேலை எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.