மும்பை: கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ஸ்ருதி ஹாஸனுக்கு ஒரு தலைவலி தீர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி ஹாஸன். அவர் தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பது தவிர்த்து படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திகளை பார்த்த அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இல்லை
நான் ஸ்ருதியை காதலிக்கவில்லை என ரெய்னாவும், நான் ரெய்னாவை காதலிக்கவில்லை என்று ஸ்ருதியும் கற்பூரம் அடிக்காத குறையாக தெரிவித்தனர்.