செல்­வ­ராசா சரண்யா என்­றதோர் இளம் மொட்டு கன­க­ரா­யன்­குளம் பகு­தியில் கருகி மடிந்திருக்கின்றது. அதனை கருக்கி அழித்­தி­ருக்­கின்­றார்கள் என்று சொல்­வதே பொருத்­த­மா­ன­தாக இருக்கும். அது எவ்­வாறு கரு­கி­யது.

அதனை கருக்­கி­யது யார்? அதனைச் செய்ய வேண்­டிய தேவை என்ன? – இது­போன்ற கேள்­வி­க­ளுக்கு இன்னும் பதில் கிடைக்­க­வில்லை. அவைகள் மர்மம் நிறைந்த விட­யங்­க­ளா­கவே இருக்­கின்­றன.

கன­க­ரா­யன்­கு­ளத்தை அடுத்­துள்ள மன்­ன­குளம் கொல்­லர்­பு­ளி­யங்­கு­ளத்தில் சீதை­யம்மா என்ற தனது பாட்­டி­யுடன் வளர்ந்து வந்­த­வர்தான் 15 வய­து­டைய சரண்யா. அவ­ருக்கு பெற்றோர் கிடை­யாது.

அவர்கள் இறந்­து­விட்­டார்கள். சிறிது காலம் சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரி­களின் பொறுப்பில் வவுனியாவில் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்தார்.

சரண்யா பார்­வைக்கு முழு­மை­யாக வளர்ச்­சி­ய­டை­யாத ஒரு பிள்­ளையின் தோற்ற இயல்பைக் கொண்டி­ருப்பார். ஆனால் மிகவும் திற­மை­சாலி. படிப்பில் மிகவும் கெட்­டிக்­காரி.

செயற்­திறன் மிக்­கவர் என்­ப­து தான் அவ­ருடன் நன்கு பழ­கி­ய­வர்கள் மற்றும், அவரை நன்கு அறிந்­தவர்களின் கருத்­தாகும்.

எவ்­வ­ள­வுக்குத் திற­மை­சா­லியோ, அந்த அள­வுக்கு பிடி­வாதம் பிடிப்பார். கோபமும் கொள்வார் என்றும் அவரை நன்கு அறிந்­த­வர்கள் கூறு­கின்­றார்கள்.

தனக்குப் பிடிக்­காத விட­யங்­களில் அவரை ஈடு­ப­டுத்த முடி­யாது. அது எவ்­வ­ள­வுதான் முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தாலும், அதனை, அவரைச் செய்ய வைக்க முடி­யாது. அவ்­வ­ளவு பிடி­வா­த­மு­டை­யவர்.

இந்தப் பிடி­வா­தத்தின் முன்னால் மற்­ற­வர்கள் பணிந்து போயி­ருக்­கின்­றார்­களே தவிர, அவரை ஒரு­வ­ரா­லுமே பணிய வைக்க முடி­ய­வில்லை என்­பதே அவ­ருடன் பழ­கி­ய­வர்கள்.

அவ­ரு­டைய நலன்­களில் அக்­கறை கொண்டு செயற்­பட்­ட­வர்­களின் அனு­ப­வ­மாகும். அவ­ருடை பிடி­வா­தத்தை ஒதுக்­கி­விட்டுப் பார்த்தால், அவரைப் போன்ற நல்­ல­தொரு பிள்­ளையைக் காண முடி­யாது என்­பதும் அவர்­க­ளு­டைய அபிப்­பி­ரா­ய­மாகும்.

suside-041சிறுவர் இல்­லத்தில் இருந்த சரண்யா தனது அம்­மம்­மா­வுடன் வசிக்க விரும்­பி­ய­தை­ய­டுத்து, அவர் அவரு­டைய அம்­மம்­மா­வுடன் இருப்­ப­தற்கு அதி­கா­ரிகள் அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

அம்­மம்­மா­வுடன் கொல்­லர்­பு­ளி­யங்­கு­ளத்தில் வசித்து வந்த சரண்யா கன­க­ரா­யன்­குளம் மகா­வித்­தி­யா­ல­யத்தில் இணைந்து படித்து வந்தார்.

படிப்பில் இயற்­கை­யா­கவே திற­மை­சா­லி­யான அவர் பாட­சா­லை­யிலும் நன்கு கல்­வி­கற்று ஏனைய மாண­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாகத் திகழ்ந்தார்.

அம்­மம்­மா­வுடன் இணைந்­தி­ருந்த சரண்­யாவின் மூத்த சகோ­தரன் அயலில் உள்ள ஒரு குடும்­பத்­துடன் சேர்ந்து அங்­கேயே வசித்து வந்­த­தை­ய­டுத்து, சரண்­யாவும் அங்கு சென்று இருந்து பாட­சா­லைக்குச் சென்­றுள்ளார். சரண்­யாவின் இளைய சகோ­தரன் ஒரு­வரும் கூட அங்கு சென்று சில நாட்கள் இருந்துள்ளார்.

சரண்­யாவின் சகோ­தரன் தங்­கி­யி­ருந்த குடும்­பத்தில் ஒரு பெண்ணும், அவ­ரு­டைய வய­து­வந்த இரண்டு மகள்­க­ளுமே இருந்­தனர்.

இந்தக் குடும்பம் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­தது. ஆனால் தொழில் நிமித்­த­மாக சரண்­யாவின் அம்­மம்­மா­வு­டைய அயலில் வசித்து வந்­தது. அய­ல­வர்கள் என்ற பழக்­கத்தில் சரண்­யாவின் சகோ­த­ரனும், சரண்­யாவும், அவ­ரு­டைய இளைய சகோ­த­ர­னும் அங்கு சென்­றி­ருந்­தனர்.

முதலில் இந்த உறவும் வாழ்க்­கையும் நன்­றா­கவே இருந்­தது. ஆனால், கடந்த பெப்­ர­வரி மாதம் சிவராத்திரி தின விழா வந்­த­தை­ய­டுத்து, சரண்­யாவின் வாழ்க்­கையில் சூறா­வளி வீசி­யது.

சிவ­ராத்­தி­ரிக்­காக திருக்­கே­தீஸ்­வரம் சென்று வந்த சரண்யா சில தினங்­க­ளாக உடல் நலம் குன்­றிய நிலையில் இருந்­துள்ளார்.

தொண்டை நோ எனக் கூறி, பேச முடி­யா­தி­ருப்­ப­தா­கவும், தெரி­வித்­த­தை­ய­டுத்து, அந்த வீட்டுப் பெண் சரண்­யாவை மாங்­குளம் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்று சிகிச்­சைக்­காக அனு­ம­தித்­தி­ருந்தார்.

திடீர் மர­ணமும், சரண்­யாவின் உடல் நிலையும்

அங்கு சரண்­யாவின் உடல் நிலை மோச­ம­டைந்­த­தை­ய­டுத்து, அவரை வைத்தி­யர்கள் கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லைக்கு மேல் சிகிச்­சைக்­காக அனுப்­பி­யி­ருந்­தார்கள். அங்கு அவர் எதிர்­பா­ராத வித­மாக திடீ­ரென மர­ண­ம­டைந்­துள்ளார்.

இந்தத் திடீர் மர­ணத்­தை­ய­டுத்து, அவ­ரு­டைய மர­ணத்­திற்­கான கார­ணத்தை அறி­வ­தற்­காக நடத்­தப்­பட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­யின்­போதே, 15 வய­து­டைய பள்ளி மாண­வி­யா­கிய சரண்­யாவின் பால் நிலை சார்ந்த உள்­ளு­றுப்­புக்கள், திரு­ம­ண­மா­கிய ஒரு பெண்ணின் உடல் நிலையைப் போன்­றி­ருந்­தமை வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.

அது மட்­டு­மல்­லாமல் ஒன்­றுக்கும் மேற்­பட்­ட­வர்கள் உட­லு­றவு கொண்­டி­ருந்த நிலையும் தெரி­ய­வந்துள்­ளது.

இது­பற்றி சரண்­யாவின் உயி­ரற்ற உடலை மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய வைத்­தியர் சரண்யாவின் அம்­மம்­மா­வுக்கும் அவ­ருடன் உத­விக்­காகச் சென்­றி­ருந்த கிராம மாதர் அபி­வி­ருத்திச் சங்கத் தலை­விக்கும் தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்தே, சரண்யா கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு ஆளா­கி­யி­ருந்தார் என்ற விடயம் பகி­ரங்­க­மா­கி­யது.

s-saranika-rape1-600x450சரண்­யாவின் மரணம் குறித்து அறிந்த வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், வினோ நோக­ரா­த­லிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஜி.ரி.லிங்­க­நாதன்,

எம்.தியா­க­ராஜா, தர்­ம­பால சென­வி­ரத்ன ஆகியோர் கொல்­லர்­பு­ளி­யங்­குளம் கிரா­மத்­திற்குத் துக்கம் விசா­ரிக்கச் சென்­ற­போதே, சரண்­யாவின் அம்­மம்­மாவும், கிராம மாதர் அபி­வி­ருத்திச் சங்­கத்­தி­னரும் சரண்­யா­வுக்கு என்ன நடந்­தது என்­பது பற்றி தாங்கள் அறிந்­த­வற்றைத் தெரி­வித்து, அவ­ருக்கு இழைக்­கப்­பட்­டி­ருந்த அநி­யா­யத்­திற்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என கோரி­யி­ருந்­தனர்.

sivaskthiசரண்­யாவின் குடும்ப நிலைமை உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளையும் அறிந்து கொண்ட மக்கள் பிர­தி­நி­திகள் கன­க­ரா­யன்­குளம் பொலி­சாரைச் சந்­தித்து சரண்­யாவின் மரணம் தொடர்­பான விப­ரங்கள் என்ன என கேட்­ட­போது, அவர்கள் சரண்யா கூட்டுப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தினர்.

அவ­ரு­டைய மரணம் தொடர்­பான விப­ரங்­களைத் தெரி­வித்த பொலிசார், தமது பதி­வேட்டில் அவர் மீது இழைக்­கப்­பட்­டி­ருந்த பாலியல் குற்றம் தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய பகு­தியை வாசிப்­ப­தற்கும் அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

ஆங்­கி­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அந்தப் பகு­தியை வட­மா­காண சபை உறுப்­பினர் ஜி.ரி.லிங்­க­நாதன் ஏனைய மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கும், அவர்­க­ளுடன் சென்­றி­ருந்த செய்­தி­யா­ளர்­க­ளுக்கும் கேட்கும் வகையில் சத்­த­மாக வாசித்­தி­ருந்தார்.

policeஇந்த மரணம் தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தாக கன­க­ரா­யன்­குளம் பொலிசார் மக்கள் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்­த­போது…….,

சரண்யா தங்­கி­யி­ருந்த வீட்­டிற்கு அடிக்­கடி வழ­மை­யாகச் சென்று வந்­த­வர்கள் பற்றி, தாங்கள் அறிந்த விப­ரங்­க­ளையும், அவர்­களின் பெயர்­க­ளை­யும்­கூட மக்கள் பிரதிநிதிகள் பொலி­சா­ரிடம் தெரி­வித்து, இவர்­க­ளையும் விசா­ரணை செய்ய வேண்­டி­யது அவ­சியம் என வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

அதே­வேளை, தன்னை ஒரு பொலிஸ்­காரர் என கூறிக்­கொண்டு அந்த வீட்­டிற்குச் சென்று வந்­தவர் பற்­றியும் அவர்கள் கன­க­ரா­யன்­குளம் பொலி­சா­ருக்குத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

அது மட்­டு­மல்­லாமல், சரண்­யாவின் மரணம் ஊர் மக்கள் மத்­தியில் மட்­டு­மல்­லாமல் பொது­மக்கள் மத்தியில் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

மக்கள் மத்­தியில் ஒரு­வித பதற்ற நிலையைத் தோற்­று­வித்­துள்­ளது என்­ப­தையும் எடுத்­துக்­கூறி முறை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்­ப­துடன், சிறுமி சரண்யா மீது இழைக்­கப்­பட்­டுள்ள பாலியல் குற்­றத்­திற்குக் கார­ண­மா­ன­வர்­களை உட­ன­டி­யாகக் கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்­டனர்.

ஆனால் நாட்கள் நகர்ந்­த­னவே தவிர, சிறுமி சரண்யா தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­த­மா­கவும், சரியான முறை­யிலும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

சிறுமி சரண்­யாவின் மரணம் தொடர்­பான அதிர்ச்­சி­யூட்டும் தக­வல்கள் ஊட­கங்­களில் வெளி­வந்­தி­ருந்த போதிலும், சிறுவர் நலன்கள் தொடர்­பாகச் செயற்­ப­டு­கின்ற அரச திணைக்­க­ளங்­களின் கவ­னத்தை உரிய முறையில் ஈர்த்­த­தா­கவோ, அவர்­களை துடிப்­புடன் செயற்­பட வைத்­த­தா­கவோ தெரி­ய­வில்லை.

அதே­நேரம் இந்த விடயம் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்ற ஏற்­பட்­டி­ருந்த அழுத்­தத்­தை­ய­டுத்து, தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் விசா­ர­ணை­களை முடுக்­கி­விட்­டி­ருப்­ப­தாக சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் ரோஸி சேனா­நா­யக்க தனது முக­நூலில் தெரி­வித்­தி­ருந்தார்.

சரண்­யாவின் மரணம் சம்­ப­வித்து ஒரு வாரத்­துக்கும் அதிக காலம் கடந்த பின்பே தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் அது­பற்­றிய விசா­ர­ணை­களை முடுக்­கி­விட்­டி­ருந்­த­தாகத் தெரி­கின்­றது.

சிறுமி சரண்யா சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து பின்னர் அவ­ரு­டைய அம்­மம்­மா­வுடன் சேர்க்­கப்பட்டி­ருந்து, பின்னர் அவர் திடீ­ரென மர­ண­ம­டைந்­ததைப் பற்றி உட­ன­டி­யாக சிறுவர் நன்­ன­டத்தைப் பிரிவினர் உரிய அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­தி­ருந்த போதிலும், அவர் மீது இழைக்கப்பட்­டி­ருந்த குற்றம் தொடர்­பான தக­வல்கள் தாம­த­மா­கவே அந்த உரிய அதி­கா­ரி­களின் கவனத்­திற்குச் சென்­ற­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

suside-01இப்­போ­தைய நிலைமை

சிறுமி சரண்யா மீது பாலியல் குற்றம் இழைக்­கப்­பட்­ட­தற்­கான அடை­யா­ளங்கள் அவ­ரு­டைய உடலில் காணப்­பட்­டுள்ள போதிலும், அவ­ரு­டைய மரணம் இயற்கை மரணம் என்றே பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

ஆயினும் அவ­ரு­டைய உடலின் நரம்புத் தொகு­தியில் நச்சுத் தன்மை காணப்­பட்­ட­மையும் அவ­தா­னிக்­கப்­பட்டு, அது தொடர்­பான மருத்­துவ ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்­காக முக்­கிய உடற்­பா­கங்கள் அரச பகுப்­பாய்வு திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அந்த ஆய்­வ­றிக்கை வந்த பின்பே, இறப்­புக்­கான காரணம் தெரி­ய­வரும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மர­ணத்தில் சந்­தேகம் எழாத கார­ணத்­தினால், பொலிசார் மேற்­கொண்டு துரித விசா­ர­ணை­களை நடத்த முடி­யா­தி­ருப்­ப­தா­கவும், இறப்­புக்­கான காரணம் தெரிந்த பின்பே மேற்­கொண்டு நட­வ­டிக்­கைகள் எடுக்க முடியும் என்றும் பொலிசார் தெரி­வித்­துள்­ளனர்.

ஆயினும் இது தொடர்­பான பூர்­வாங்க விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­வ­தாக பொலிசார் தெரி­வித்­துள்­ளனர்.

அதே­நேரம் இந்த மரணம் தொடர்­பாக பொலிசார் நீதி­மன்­றத்­தி­ற்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில், புதைக்­கப்­பட்­டுள்ள சரண்­யாவின் சட­லத்தைத் தோண்­டி­யெ­டுத்து, மீண்டும் மருத்­துவ பரி­சோ­தனை செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க வேண்டும் என கோரி­யி­ருக்­கின்­றனர்.

ஆயினும் அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்ள நீதி­மன்றம், இந்த மரணம் தொடர்­பாக நடத்­தப்­பட்ட மரண விசா­ரணை அறிக்­கை­யையும், மருத்­துவ அறிக்­கை­யையும் பார்­வை­யிட்­டதன் பின்பே பொலி­சாரின் கோரிக்­கைக்குப் பதி­ல­ளிக்க முடியும் என தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் மரண விசா­ரணை அறிக்கை மருத்­துவ அறிக்கை என்­ப­வற்றை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதி­மன்­றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலி­சா­ருக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சிறுமி சரண்யா வசித்த இடம் கன­க­ரா­யன்­குளம் பகுதி சிகிச்­சைக்­காக மாங்­கு­ளத்தில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர், கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லை­யி­லேயே மர­ண­ம­டைந்தார்.

மரண விசா­ர­ணையும் கிளி­நொச்­சி­யி­லேயே நடை­பெற்­றது. ஆனால், சரண்­யாவின் மர­ணத்­திற்கு முன்­னரும், மர­ணத்­திற்குப் பின்­னரும். அவ­ரு­டைய விட­யங்கள் வவு­னியா மாவட்ட நீதி நியா­யா­திக்கப் பிரதே­சத்­தி­லேயே கையா­ளப்­ப­டு­கின்­றது என்­பது முக்­கி­ய­மா­னது.

விடை காணப்­ப­ட­வேண்­டியவிட­யங்கள்

சிறுவர் இல்லம் ஒன்றில் பரா­ம­ரிக்­கப்­பட்டு பின்னர் அம்­மம்­மா­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட சிறுமி சரண்யா, அம்­மம்­மாவின் பரா­ம­ரிப்பில் இல்­லாமல் வேறு யாரோ ஒரு குடும்­பத்­தி­ன­ருடன் சென்று வசித்­தி­ருந்­தது தொடர்பில் சிறுவர் பரா­ம­ரிப்பு அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக ஏன் கவனம் செலுத்­த­வில்லை என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

சரண்­யாவின் குண­ந­லன்கள் இயல்­புகள் என்­ப­வற்றை நன்கு அறிந்­தி­ருந்த அதி­கா­ரிகள், அவர் வசித்த அம்­மம்­மாவின் வீடு, அவ­ருக்குப் போதிய அளவில் பாது­காப்­பான­தல்ல என தெரி­வித்து, அவ­ருக்கு வீட்­டுத்­திட்­டத்தில் இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று அது தொடர்­பான அதி­கா­ரி­க­ளுக்கு பரிந்­து­ரைத்­தி­ருந்­தனர் என்ற தக­வலும் உண்டு.

அதே­நேரம், சரண்யா இறப்­ப­தற்கு முன்னர் வசித்து வந்த வீட்டில் இருந்த அவ­ரு­டைய வய­தொத்த ஏனைய இரண்டு சிறு­மி­க­ளுக்கும், சரண்­யா­வுக்கும் அந்த வீட்­டிற்கு அடிக்­கடி வருகை தந்­த­வர்­களில் குறிப்­பிட்ட ஒரு­வரோ, இரு­வரோ பாலியல் சார்ந்த காட்­சி­களை கைத்­தொ­லை­பே­சியில் பார்ப்­ப­தற்கு வழங்­கி­யி­ருந்­தனர் என்ற தக­வலும் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது.

இந்தத் தகவல் நிச்­ச­ய­மாக பொலி­சாரின் விசா­ர­ணை­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும், அது­பற்­றிய தக­வல்கள் அந்த விசா­ரணை பதிவில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும் என்று எதிர்­பார்க்க வேண்­டி­யுள்­ளது.

சிறுமி சரண்யா ஏதோ ஒரு வருத்தம் காரண­மாக சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு திடீ­ரென மரணமடைந்­த­தை­யடுத்து நடத்­தப்­பட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­யி­லேயே அவர் மீது பாலியல் குற்றம் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற தடயம் தெரிந்­தது.

தக­வலும் வெளி­யா­கி­யி­ருந்­தது. அப்­ப­டி­யானால், அவ­ருக்கு தனது வீட்டில் இட­ம­ளித்து, அவரைப் பரா­ம­ரித்து வந்த பெண் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டாரா என்­பது தெரி­ய­வில்லை.

அதே­நேரம் அந்த வீட்டில் சரண்­யா­வுடன் சம வய­து­டைய இரண்டு சிறு­மிகள் இருந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்­களும் திருக்­கே­தீஸ்­வ­ரத்­திற்கு சிவ­ராத்­தி­ரிக்­காகச் சென்­றார்­களா, அப்­ப­டி­யானால், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது, அல்­லது அவர்­க­ளுக்கு ஏதேனும் நடந்­ததா என்­பது பற்றி விசா­ரணை செய்­யப்­பட்­டதா என்­பதும் தெளி­வில்­லாமல் உள்­ளது.

சரண்யா மர­ண­ம­டைந்­த­தை­ய­டுத்து, அவ­ருக்கு இழைக்­கப்­பட்­டி­ருந்த பாதிப்­புக்கு, அவர் வசித்­தி­ருந்த அல்­லது அவரைத் தனது பெண் பிள்­ளை­க­ளுடன் வைத்துப் பரா­ம­ரித்து வந்த பெண் பொறுப்பு கூற வேண்டும் என்ற கொதிப்பு ஊர் மக்கள் மத்­தியில் எழுந்­தி­ருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், அவர் மீது விசா­ரணை நடத்­தப்­ப­டா­தி­ருப்­பதை உணர்ந்த மக்கள் அவர் தொடர்ந்து தமது ஊரில் இருப்­ப­தனால் வேண்­டத்­த­காத விளை­வுகள் ஏனைய பிள்­ளை­க­ளுக்கும் என்ற அச்­சத்­தையும் கொண்­டி­ருந்­தனர்.

இதனால் அயல் வீட்டுக் கிண­று­களில் அந்தப் பெண் தண்ணீர் எடுப்­ப­தற்கு வீட்டு உரி­மை­யா­ளர்கள் அனு­ம­திக்­க­வில்லை. இதன் கார­ண­மாக அவர் அந்த ஊரில் தொடர்ந்து வசிக்க முடி­யாத நிலை­யேற்­பட்டு, அவர் யாழ்ப்­பா­ணத்திற்குத் தனது இரண்டு பெண்­பிள்­ளை­க­ளு­டனும் சென்­று­விட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அந்தப் பெண்­ணு­டைய வீட்டில் இருந்து திருக்­கே­தீஸ்­வ­ரத்­திற்குச் சென்ற சரண்யா எத்­தனை நாட்­களின் பின்னர் வீடு திரும்­பினார், அங்கு சென்­றி­ருந்­த­போது, அவ­ருக்கு என்ன நடந்­தது, யார் யார் அவ­ரு­டன சென்­றி­ருந்­தார்கள், அவர்கள் உண்­மை­யி­லேயே திருக்­கே­தீஸ்­வரம் சென்­றார்­களா அல்­லது அங்கு செல்­வ­தாகக் கூறி வேறு எங்­கேனும் சென்­றார்­களா, அப்­ப­டி­யானால் எங்கு சென்­றார்கள், என்ன நடந்­தது, என்ற விட­யங்கள் எதுவும் ஆரா­யப்­பட்­ட­தா­கவோ விசா­ரணை செய்­யப்­பட்­ட­தா­கவோ தெரி­ய­வில்லை.

அது மட்­டு­மல்­லாமல், சரண்யா தங்­கி­யி­ருந்த வீட்டில் அவ­ருக்கு ஏதேனும் நடந்­ததா என்ற கேள்­விக்கும் விடை காணப்­பட வேண்­டி­யுள்­ளது.

மறு­பக்­கத்தில், சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரி­க­ளினால், பாது­காப்­பான பரா­ம­ரிப்பு கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்பில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட சிறுமி சரண்­யாவை பொறுப்­பேற்ற அவ­ரு­டைய அம்­மம்மா என்ன கார­ணத்­திற்­காக, அவரை வேறு ஒரு­வ­ரு­டைய வீட்டில் சென்று தங்­கி­யி­ருப்­ப­தற்கு அனு­ம­தித்­தி­ருந்தார் என்­பது கண்­ட­றி­யப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை.

சிறுமி சரண்யா சென்று தங்­கி­யி­ருந்த வீட்டுப் பெண்­ம­ணிக்கும், சரண்­யாவின் அம்­மம்­மாவும் உற­வி­னர்­களா, நண்­பர்­களா அல்­லது ஏற்­க­னவே ஒரு­வ­ருக்கு ஒருவர் பரிச்­ச­ய­மா­ன­வர்­களா?

அவ்­வாறு இல்­லை­யென்றால் எந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் சரண்­யாவை அவ­ரு­டைய அம்­மம்மா அந்தப் பெண்ணின் வீட்டில் சென்று தங்­கி­யி­ருப்­ப­தற்கு அனு­ம­தித்­தி­ருந்தார் என்­பதும் தெளி­வில்­லாமல் இருக்­கின்­றது.

இவ்­வாறு பல தரப்­புக்­களில் பல கோணங்­களில் கேள்­விகள் எழு­வ­தற்குக் காரணம் இல்­லாமல் இல்லை.

கூட்டுப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தற்­கு­ரிய தட­யங்­களை உடலில் கொண்­டி­ருந்த சிறுமி சரண்­யா­வுக்கு வயது 15.

இலங்­கையில் ஒருவர் 18 வயதை அடைந்த பின்பே, அவர் வய­துக்கு வந்­தவர் என்று சட்­ட­ரீ­தி­யாகக் கணிக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் 16 வய­து­டை­ய­வர்­களும், அதற்குக் குறைந்­த­வர்­களும் சிறு­வர்கள் என கணிக்­கப்­ப­டு­கின்­றார்கள்.

இந்த வகையில் பூப்­ப­டைந்த சிறு­மி­யொ­ரு­வரின் விருப்­பத்­து­டனோ அல்­லது அவ­ரு­டைய விருப்­பத்­திற்கு மாறா­கவோ அவ­ருடன் உட­லு­றவு கொள்­வ­தென்­பது, தண்­ட­னைக்­கு­ரிய பாலியல் வல்­லு­றவு குற்­ற­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய குற்­றத்­திற்குக் கடும் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று சட்டம் கூறு­கின்­றது.

இதை­யும்­விட சிறுவர் உரி­மைகள் ரீதி­யா­கவும், சிறுமி ஒருவர் மீதான பாலியல் குற்றம் என்­பது பார­தூ­ர­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் அநி­யா­ய­மாகக் கசக்கிப் பிழியப்­பட்ட சரண்யா குறித்து சிறுவர் உரி­மைக்­காகக் குரல் கொடுப்­ப­வர்கள் என்ன செய்­தி­ருக்­கின்­றர்கள், அவ­ருடன் வேறு சிறு­மி­களும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களா என்­பதைக் கண்­ட­றிய என்ன செய்­தி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்வி விசு­வ­ரூ­ப­மெ­டுத்­தி­ருக்­கின்­றது.

எது எப்­ப­டி­யா­னாலும், சிறுமி சரண்யா மீது இழைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­செ­யல்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்கள் கண்டு பிடிக்­கப்­பட வேண்டும்.

அவர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். இதன் ஊடாக சரண்யா போன்ற அபலைச் சிறு­மி­களின் பாது­காப்பு சமூ­கத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

-செல்­வ­ரட்னம் சிறி­தரன்-

Share.
Leave A Reply