விரைவில் வெளியாகவுள்ள அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுத்துள்ளனர்.
அனுஷ்கா ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். ராணா, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், சுமன், நித்யாமேனன், கத்ரினா திரேசா போன்றோரும் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ளார். குணசேகர் இயக்கி உள்ளார். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.
இதற்காக அனுஷ்கா வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று இப்படத்தில் நடிக்கிறார்.சிக்கலில் மாட்டிக் கொண்டதா அனுஷ்காவின் “ருத்ரம்மா தேவி”? – சினிமா வட்டாரத்தில் சலசலப்பு இதன் பாடல் வெளியீட்டு விழாவை இரண்டு இடங்களில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சரித்திர கதை என்பதால் இப்படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற படக்குழுவினர் முயற்சிக்கின்றனர்.
படத்தின் இயக்குனர் குணசேகர் தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர்ராவை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது கேளிக்கை வரி விலக்கு பெறுவது பற்றியும் பேசியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்ததும் சந்திரசேகரராவ், கோபமடைந்தாராம்.
அதில் தெலுங்கானா மாநிலம் உதயமானதற்கு எதிரான வசனங்கள் இடம் பற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதுவே சந்திரசேகரராவை ஆத்திரப்பட வைத்ததாம்.
அதனை நேரிலேயே டைரக்டர் குணசேகரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் ருத்ரமா தேவி படத்துக்கு சிக்கல் எற்பட்டு உள்ளது. வரி விலக்கும் கிடைக்காது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.