அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இளைஞரான ஜஸ்ப்ரீத் சிங் கல்ரா என்பவரது உடலில் எலும்புகள் உள்ளனவா? அல்லது, அதற்கு பதிலாக அவரது உடல் முழுக்கமுழுக்க ரப்பரால் செய்யப்பட்டதோ..? என்ற சந்தேகத்தை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.

மார்புக்கு நேராக இருக்கும் முகத்தை அப்படியே இடதுபுறமாகவும், வலதுபுறமாகவும் திருப்பி நேராக 180 டிகிரி கோணத்தில் முதுகுக்கு நேராக நிலை நிறுத்தி வைக்கும் இவர், முதுகை வில்லாக வளைத்து, இரண்டாக மடிந்து, புன்னகை மாறாத முகத்துடன், நாடி தரையில் படியும் வகையில் ஓய்வு எடுக்கிறார்.

இவை தவிர தனது எண்ஜான் உடலை பிழிந்து காயப்போடும் சிலிர்ப்பூட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளாக தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிக் கொண்டுள்ளது.

Share.
Leave A Reply