வாழைச்­சேனை பகு­தியில் நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கருணா அம்மான் எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரா­கு­மாறு பொலிஸார் அழைப்பு விடுத்­துள்­ளனர்.

இன்று காலை 10.00 மணிக்கு இவ்­வாறு பொலிஸ் நிலையம் வரு­மாறு கொழும்பில் உள்ள அவ­ரது வீட்­டுக்கு பொலிஸார் தகவல் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அவர் குறித்த நேரத்தில் பொலிஸ் நிலை­யத்­துக்கு வருகை தர தவறும் பட்­சத்தில் நீதி­மன்றில் அவ­ருக்கு எதி­ராக அறிக்கை தாக்­கல்­செய்­யப்­பட்டு அடுத்த கட்ட நடவ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

வயலில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஒருவர் மீது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­தாக வாழைச் சேனை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ளது.

அது தொடர்பில் சாட்­சி­யா­ளர்­க­ளி­னதும் முறைப்­பாட்­டா­ள­ரி­னதும் வாக்கு மூலங்­களை பொலிஸார் பெற்­றுள்­ள­தா­கவும் இதனை அடுத்தே கரு­ணா­வுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

வாழைச்சேனை பகு­தியை சேர்ந்த எஸ்.வன­ராஜா என்­பவர் தான் வயலில் வேலை செய்­து­கொன்­டி­ருந்த போது தாக்­கப்­பட்­ட­தாக பொலிஸில் முறை­யிட்­டி­ருந்தார். அத்­துடன்இ தன்னை துப்­பாக்கி முனையில் அவர் அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் அம்­மு­றைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர மேலும் தகவல் தரு­கையில்,

குறித்த முறைப்­பாடு தொடர்பில் உடன் நடவ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. முறைப்­பாட்­டா­ளரின் முறைப்­பாட்டு தக­வல்­க­ளுக்கு அமை­வாக கிரான் பகு­தியில் உள்ள விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் எம்.பி.யின் சகோ­தரி ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்து வந்தே அவர் தாக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது.

விவ­சாய நிலம் தொடர்­பாக ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மா­கவே இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இந் நிலையில் நேற்று பொலிஸார் உட­ன­டி­யா­கவே கருணா அம்­மானின் சகோ­த­ரியின் குறித்த கிரான் பகு­தியில் உள்ள வீட்­டுக்கு சென்று விசா­ரணை நடத்­தினர். எனினும் அங்கு ஒரு­வரும் இல்லை எனவும் கருணா உள்­ளிட்­ட­வர்கள் கொழும்பு வீட்டில் உள்­ள­தா­கவும் தகவல் தெரி­விக்­கப்­பட்­டது.

இதனை தொடர்ந்து முறைப்­பாட்­டா­ள­ரி­னதும் நேரில் கண்ட சாட்­சி­யங்­க­ளி­னதும் வாக்கு மூலங்­களை பொலிஸார் பதிவுச் செய்­து­கொண்ட பின்னர் கொழும்பில் உள்ள எம்.பி.யின் வீட்­டுக்கு பொலிஸார் தகவல் ஒன்றை அனுப்­பி­யுள்­ளனர். அதில் இன்று காலை 10.00 மணிக்கு வாழைச் சேனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அவ்வாறு பொலிஸ் நிலையம் வராமல் தவிர்ப்பாரானால் அவருக்கு எதிராக மன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

Share.
Leave A Reply