முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
mercedes_benz_sl600_swarovski_studded8
சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன் டலால், உல்லாசம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்பது உலகறிந்த ரகசியம்.

இருப்பினும், உலகின் விலையுயர்ந்த கார்களை சேகரிப்பதிலும் இவர் அதிக ஆர்வம் உடையவர் என்று சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி, அதிநவீனமானதும் விலையுயர்ந்ததுமாக 37 கார்களை தனது அரண்மனை வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் இளவரசர் அல்வாலித் இன் டலால், 38-வதாக ஒரு சொகுசுக்காரை வாங்க விரும்பினார்.

mercedes_benz_sl600_swarovski_studded1
சொகுசுக் கார் என்றாலே, அனைவரின் நினைவிலும் நிழலாடும் ’மெர்ஸடிஸ் பென்ஸ்’ இவரது மனக்கண்ணிலும் தோன்றத்தொடங்கியது.

mercedes_benz_sl600_swarovski_studded2

உடனடியாக, ஜெர்மனியில் இருந்து ஒரு பென்ஸ் காரை இறக்குமதி செய்த அவர், அந்தக்காரை இந்த ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும்படி செய்ய வேண்டுமானால், என்ன செய்யலாம்?

என சில நாட்கள் வரை சிந்தித்தார். மந்திரி பிரதாணிகளிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் ஆலோசனை கேட்டார். ‘ஹுரேக்கா..!’ என உரக்க கத்தாத குறையாக ஒரு புதிய முடிவுக்கு வந்தார் இளவரசர்.

mercedes_benz_sl600_swarovski_studded3காரின் உள்பகுதி, வெளிப்பகுதி, கதவின் கைப்பிடி, வீலின் ரிம்கள், புகையை வெளியேற்றும் சைலன்சர் என தலை முதல் பாதம் வரை அந்த பென்ஸ் காருக்கு வைரத்தால் ஜோடனை செய்தால் என்ன? என்று ஒரு ‘சிம்பிளான’ யோசனை அவருக்கு உதித்தது.

mercedes_benz_sl600_swarovski_studded4உடனடியாக வைர வியாபாரிகளையும், நகை அலங்கார வேலைப்பாட்டில் பெயர் போன சில தொழிலாளிகளையும் அரண்மனைக்கு வரவழைத்து, தனது திட்டத்தை தெரிவித்தார்.

இளிச்சவாயன் எவனாவது இதைச்சொன்னால் இளக்காரம் செய்ய முடியும். ஆணையிடுபவர் செல்வவளம் மிக்க பெரிய நாட்டின் இளவரசராயிற்றே.., அங்குலம், அங்குலமாக வைரத்தால் இழைக்கப்பட்ட அந்தக்கார் சில மாதங்களில் கண்ணை சிமிட்டிக்கொண்டு பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்த தொடங்கியது.

Visitors look at customized Mercedes-Benz at Tokyo Auto Salon 2010 in Chiba
கடந்த 2013-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற கார் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தக்கார், பலரை மூக்கின் மீது விரலை வைக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதே வேளையில், ஏழை நாடுகளை சேர்ந்த கீழ்த்தட்டு மக்களை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொள்ளவும் வைத்தது. இந்த காருக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

48 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 4 கோடியே எண்பது லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 300 கோடி ரூபாய்). அம்மாடியோயோயோவ்வ்..! என்று கத்தத்தோன்றுகின்றதா? கொஞ்சம் பொறுத்திருங்கள்.

mercedes_benz_sl600_swarovski_studded5
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இந்த வைரக்காரின் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவும், தொட்டுப்பார்க்கவும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய்) தர வேண்டும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் அறிவித்திருந்தது, விலையைவிட பெரிய ஆச்சரியத்தையும் கூடவே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

’ஒரு வேளை இந்த காருக்காக செலவு செய்ததில் சவுதி இளவரசரின் பாக்கெட் மணி காலியாகி விட்டதோ, என்னவோ..? அதுதான் தொட்டுப்பார்க்க கூட இம்பூட்டு பணம் கேக்குறாரு..’ என்று பார்வையாளர்களில் சிலர் காமெடியாக பேசிக்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தன.

500 கிலோ தங்கத்தை உருக்கி உருவாக்கிய உலகின் விலை உயர்ந்த லம்போர்கினி கார்: வீடியோ இணைப்பு
25-03-2014
9e1e2318-0182-4e92-ab96-8274774fc4df_S_secvpf

ஆடம்பரத்துக்கு பெயர்போன துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, நகரும் தங்க ரதமாக அதை சாலையில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர்.

வெளிப்புறத்தில் தங்கத்தகடு, வைரக்கற்களுடன் கூடிய முகப்பு விளக்குகள், உள் இருக்கை மற்றும் மேற்கூரையில் தங்க இழைகளில் நவரத்தின கற்களின் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய இந்த காரின் கண்ணாடிகள் அனைத்தும் குண்டுகளால் துளைக்க இயலாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013-ம் ஆண்டு துபாய் கார் கண்காட்சியில் இடம்பெற்ற இந்த ‘லம்போர்கினி அவெண்டாடர் LP700-4.’ கார், வெறும் காட்சிப் பொருளாக மட்டுமின்றி, V12 எஞ்சினுடன் மூன்றே வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்க வல்லது.

இதன் விலையாக 2 கோடியே 70 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் சுமார் 45 கோடி ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply