கம்பளை நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியையின் புகைப்படங்களை பெற்று அதனை ஆபாசப் படங்களாக மாற்றியமைத்து பேஷ்புக்கில் பதிவேற்றிய மாணவன் குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை ஏற்பாடு செய்த சுற்றுலாப் பயணத்தின் போது 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன், ஆசிரியையை புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்துடன் ஆபாச படங்களை ஒட்டி, ஆசிரியையின் பெயரில் பேஷ்புக் கணக்கொன்றை திறந்து அதில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

தனது பெயரில் பேஷ்புக் கணக்கொன்றை ஆரம்பித்து மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட ஆசிரியை தான் கற்பிக்கும் 11 ஆம் ஆண்டு வகுப்பு மாணவனிடம் விசாரித்த போது, தனது பெயரில் பேஷ்புக் கணக்கை ஆரம்பித்து புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியை இது குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மாணவனிடம் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply