ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் கூறியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக தன்னிடம் இருக்கும் சகல தகவல்களையும் தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேர்வின் சில்வா, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார்.

Untitled218-600x356அது சம்பந்தமான விசாரணைகள் நேற்று ஆரம்பமாகியதுடன் மேர்வின் சில்வா திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கினார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ய போவதை கோத்தபாய ராஜபக்ச அறிந்திருந்தார். லசந்த மீது அவருக்கும் கடும் கோபம் இருந்தது.

முன்னாள் ஜனாதிபதி இதில் சம்பந்தமில்லை. கோத்தபாயவே லசந்த கொலைக்கு காரணம்.

அடுத்தது ராகம லொக்கு சிய்யா பற்றி கேட்டனர். கோத்தபாய மற்றவர்கள் கோள் சொல்வதை அதிகம் கேட்பவர்.

யாராவது வந்து எவரை பற்றியாவது கோள் சொன்னால், அவரை முடித்து விடுவார் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

Share.
Leave A Reply