150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டகொள்ளவில்லை எனவும் தலைமை விமானி கதவை பல முறை பலமாக தட்டியும் உதைத்துள்ளதாகவும் ஆனால் துணை விமானி அமைதியாக இருந்து விமானத்தை மலையில் மோதியுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான விபத்து
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ எயார் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டொர்ப் நகருக்கு கடந்த 24 ஆம் திகதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் எல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர்.
பல நாட்டவர்கள்
அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.
தேடல் பணி
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் விமானத்தின் சிதைவுகளையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதி
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் ஆகியோர் நேற்று சென்றனர்.
ஒரு விமானி வெளியேறியது ஏன்?
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன.
அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறை கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவை லேசாக தட்டியுள்ளார்.
பதில் இல்லை. அதன்பின்னர் கதவை வலுவாக தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன்பின்னர் எந்தப் பதிலும் இல்லை என்பது விமானி அறை ஒலிப்பதிவு கருவி மூலம் தெரிய வந்துள்ளது” என கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஓயப்போவதில்லை
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வரை ஓயப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார்.
ஒலிப்பதிவு கிடைத்துள்ளது
விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ் விமானம் எதற்காக கீழே இறங்கியது என்பது குறித்து எந்த முடிவுக்கும் இப்போதைக்கு வர முடியவில்லை. இப்போதுதான் ஒரு ஒலிப்பதிவு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது அதை ஆய்வு செய்ய வேண்டும்” என பிரான்ஸ் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
விமானிகள் இடையே இணக்கமான உரையாடல்கள்
விசாரணையில் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரி ஒருவர், “விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி, விமானிகள் இடையே மிகவும் இணக்கமான வகையில் உரையாடல்கள் நடந்ததைத்தான் காட்டுகிறன்ன.
விமானிகளில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது தெரியவில்லை.
ஆனால், விமானத்துக்கு முடிவு ஏற்பட்டபோது, விமானி அறையில் ஒரு விமானிதான் இருந்திருக்கிறார், அவர் கதவைத் திறக்கவில்லை என்பது தெளிவாகின்றது என்றார்.
நடுவானில் வெடித்து சிதறவில்லை
தீவிரவாத தாக்குதல் குறித்த சந்தேகம் எழவில்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பேர்னட் காஸிநியூவ் தெரிவித்துள்ளார்.
என்னதான் நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாதபோதும், நடுவானில் விமானம் வெடித்து சிதறி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
2ஆவது கருப்பு பெட்டி கிடைக்கவில்லை
விபத்துக்குள்ளான விமானத்தின் 2ஆவது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
துணை விமானி சதி
இதற்கிடையே பாரீஸ் நகரில் பிரான்ஸ் அரசின் சட்டத்தரணி பிரைஸ் ரொபின் நேற்று இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அவரால் மீண்டும் விமானி அறைக்குள் செல்ல முடியாமல் போய்விட்டது. துணை விமானி ஹென்ட்ரூஸ் லூபிட்ஸ் வேண்டுமென்றே எல்ப்ஸ் மலையின் மீது விமானத்தை கீழாக செலுத்தி உள்ளார்.
அவரது நோக்கம், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவதுதான். கருப்பு பெட்டியில் இருந்த விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி மூலம் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
விமானி, விமானி அறையை விட்டு வெளியேறிய பின்னர் துணை விமானி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விமானி அறையில் நிசப்தம் நிலவி உள்ளது.
விமானம் கீழே வந்தபோது அலாரம் ஒலித்திருக்கிறது. கதவை ஓங்கி தட்டும் சத்தமும் கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் துணை விமானி சதி செய்துதான், விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், எதற்காக அவர் இந்த சதியில் ஈடுபட்டார், அதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்பது இனிதான் கண்டறியப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி
எல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஹென்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது.
அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
கழிவறைக்கு சென்றிருந்த விமானி திரும்ப வந்து கதவைத் தட்டியபோது, துணை விமானி கதவை திறக்கவில்லை. ஏர்பஸ் விமானத்தில், அவசரமாக விமானி, விமானி அறைக்குள் போக வழி உண்டு. அதையும் துணை விமானி மூடி, விமானி உள்ளே வர முடியாதபடிக்கு தடை செய்திருக்கிறார்.
அடுத்த சில நொடிகளில்தான் துணை விமானி பொத்தானை அழுத்தி விமானத்தை கீழே கொண்டு வந்து மலை மீது மோத வைத்திருக்கிறார்.
விமானம் விபத்துக்குள்ளாகப் போவதை உணர்ந்த பயணிகள், பதற்றத்தில் அலறி இருக்கிறார்கள்.
ஆனால் துணை விமானி பதற்றமின்றி அமைதியாக இருந்திருக்கிறார். அவரது சுவாசமும் சாதாரணமாக இருந்திருக்கிறது.
பிரான்ஸ் எல்ப்ஸ் மலை தொடரில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதோடு விமான விபத்துக்கு தீவிரவாத தாக்குதல் போன்று தெரியவில்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
எல்ப்ஸ் மலை பகுதியின், 6000 அடி உயரத்தில் பொலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனம், லுப்தான்சா. இதன் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’, குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை இயக்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ-320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
குறித்த விமானம், காலை 11.49 மணிக்கு டசல்டோர்ப் நகரைச் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் காலை 11 மணிக்கே அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் பார்சிலோனட் நகருக்கு அருகில் விழுந்து நொறுங்கியது. குறித்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டனர்.
விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகொப்டர்கள் கண்டறிந்தன. இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்ற நிலையில் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர்.
மீட்பு பணியை தொடங்கி நடைபெற்று வருகிறன்ற. விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கான காரணத்தை கண்டுபிடிக்க உதவும், கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ள்ளது.
மலையின் 6000 அடி உயரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதால் பயணிகள் யாரும் உயிர்பிழைக்கவில்லை.
ஹெலிகொப்டர் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறன்றன. பிரான்ஸ் விசாரணை குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
விபத்து நடைபெறுவதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, குறித்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே விமானம் விழுந்துள்ளது.
எனவே விமானத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது போன்று தகவல் தெரியவில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.