பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார்.
வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், தனது நண்பர் ஒருவரால், தலையில் பின்புறமாக கோடரியால் வெட்டப்பட்ட பிரியந்த சிறிசேன, ஆபத்தான நிலையில் விமானமூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நாளையே நாடு திரும்புவார்.
வரும் 30ம் நாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறிசேனவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட கொலையாளி. -படம்- லங்காதீப
அதேவேளை, இவரைக் கோடரியால் வெட்டிய நண்பர், காவல்நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
அவரை, நீதிமன்றத்தில் நேற்று நிறுத்திய போது விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.