வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம் இன அழிப்பு தீர்மானம் மற்றும் ரணில் வருகையினை புறக்கணித்தமை தொடர்பினில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த மாவை கடும் சீற்றத்துடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுகின்றார்.

இதனை அனுமதிக்கமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத்தெரிவித்தார்.ஏற்கனவே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணி செயலாளர் சிவகரன் நீக்கப்பட்டுள்ளமையினை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பினில் தமிழரசுக்கட்சி பின்னடித்துவருகின்ற நிலையினில் ஏனைய கட்சிகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்பினை கட்சிகளின் கூட்டாக முதலில் பதிவு செய்ய முற்பட்டுள்ளன.

இதனால் தமிழரசுக்கட்சி அச்சங்கொண்டுள்ளது.அண்மையினில் திருகோணமலையினில் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பங்கெடுப்பின்றி பதிவு சாத்தியமில்லையென கருத்து வெளியிடடிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாயவும் இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது வடக்கு முதல்வர் பதவிக்கு மாவை சேனாதியர் ஆசைப்பட்டதும் அது கிடைக்காது போனதும் அனைவருக்கும் தெரிந்தவிடயமாகும்.

Share.
Leave A Reply