தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார்.

இவ் வருடம் கா.பொ.த உயர்தரம் எடுக்கும் யாழ் நகருக்கு அண்மையில் உள்ள பிரபலபாடசாலை மாணவி தனது 18 வயது கடந்த 29ம் திகதி முடியும் வரை காத்திருந்து திட்டமிட்ட வகையில் செயற்பட்டு காதல் போதையில் காதலனுடன் தலைமறைவான சம்பவம் தாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் ஆவார். மாணவி 17 வயதாக இருக்கும் போது தனது வீட்டுக்கு அயலில் வசித்து வந்த வலிவடக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் க.பொ.த உயர்தரம் வரை கல்விகற்றவர் என்பதும் யாழ் நகரில் புகழ்மிக்க பாடசாலையில் கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கொழும்பில் இருந்து செயற்படும் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக வேலைபுரிந்து வருகின்றார்,

இவர்களது காதலை அறிந்த தந்தை குறித்த இளைஞனை கடுமையாகத் தாக்கியதுடன் அவனை பொலிஸ்நிலையத்திற்கும் கொண்டு சென்று எச்சரித்துள்ளார். அத்துடன் மாணவியை தனது நகரப்பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டில் கொண்டு வந்து விட்டு படிக்க செய்துள்ளார்.

சினிமா பாணியில் வில்லனாக மாறிய தந்தை தனது மகளான மாணவியும் இளைஞனும் தமது கைத் தொலைபேசியில் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகளை அத் தொலைபேசியைப் பறித்து சேகரித்து வைத்திருந்ததுடன் இளைஞனை அடித்து இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என கைத் தொலைபேசியில் வீடியோவாக வாக்குமூலம் பெற்றும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமியை காதலித்த குற்றத்திற்காக பொலிசாரிடமும் கொடுத்து அடி வாங்கச் செய்தும் அவர்களால் அச்சுறுத்தப்பட்டு இளைஞனை கடும் தொல்லைகளுக்கு உள்ளாக்கியிருந்தார்.

அத்துடன் குறித்த வர்த்தகரது கடும்போக்கைக் கண்டு அச்சப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் அப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு சென்று குடியேறியுள்ளனர்.

இந் நிலையிலே நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்த மாணவி தாயாருடன் சந்தோசமாகக் கதைத்து சிரித்தும் தனது தம்பிகளுடன் விளையாடியும் பொழுதைக் கழித்துவிட்டு பாடசாலையில் பரீட்சை நடைபெறுவதால் அங்கு செல்வதற்காக நகரப்பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்குச் தனது தந்தையின் வாகனத்தில் சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்து பாடசாலை செல்வதாகத் தெரிவித்து இளைஞனுடன் ஓடித் தப்பியுள்ளார் குறித்த மாணவி.

இதே வேளை தனது வீட்டுக்கு வந்த மாணவி வீட்டு வளவினுள் புதைத்து வைத்திருந்த நகைகள் மற்றும் தந்தை சீட்டுக் கட்டியவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 6 இலட்சம் ரூபா பணம் என்பவற்றை தனது புத்தகப் பையினுள் கொண்டே மாணவி தலைமறைவாகியுள்ளார்.

மாணவி பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு தனது தாய்க்கு தொலைபேசியில் தனது காதலனுடன் இருக்கும் தகவல்களையும் தன்னால் காசு எடுக்கப்பட்ட தகவல்களையும் நேற்று காலை 10 மணியளவில் தெரிவித்துள்ளார்.

மகள் இவ்வாறு செய்துவிட்டதை தனது மனைவியால் அறிந்த தந்தைக்கு நெஞ்சு வலி வந்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இன்று குறித்த இளைஞனையும் மாணவியையும் வரவழைத்து சமாதானம் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரும் பெண்ணின் உறவினர்களும் முயன்றுள்ளனர்.

தற்போது குறித்த இளைஞனின் வீட்டில் மாணவியின் உறவினர்கள் இருவர் சென்று முகாமிட்டுள்ளதாகவும் இளைஞனின் பெற்றோர் மற்றும் இளைஞனின் சகோதரிகளை அச்சுறுத்தும் பாணியில் அவர்கள் தொழிற்பட்டு வருவதாகவும் அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply