மயிலங்காடு ஸ்ரீமுருகன் வித்தியாலய குடிநீர்தாங்கியில் நஞ்சு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பொலிசாரிடம் கேட்டு, தலையை சுற்றி உட்கார்ந்துவிட்டார்.

DSCF8203யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடந்த சிவில் பாதுகாப்புகுழு கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

DSCF8209அனந்தியின் கேள்விக்கு பதிலளித்த வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இவ்வாறு பதிலளித்தார்-

“சம்பவம் பற்றி இப்பொழுதும் புலனாய்வு விசாரணைகள் நடந்து வருகின்றன. விசாரணை முடிந்ததும், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அது பற்றி அறிவிப்பார்.

DSCF8216அதிக விடயங்களை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்வதற்காக எமக்கு இரண்டு கண்கள், இரண்டு காதுகள் உள்ளன.

ஆனால் ஒருவாய் மட்டுமே உள்ளது. பேசுவதை குறைத்து கொள்வதற்காகவே அது உள்ளது என்றார்.

அவர் என்ன சொன்னார் என்று புரியாமல் அனந்தி மயக்கம் வராதகுறையாக உட்கார்ந்து விட்டார்.

Share.
Leave A Reply