குவைத் நாட்டில் உயி­ரி­ழந்த மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த யுவ­தியை சட்­ட­பூர்­வ­மற்ற முறையில் குவைத் நாட்­டிற்கு அனுப்­பிய உப முக­வ­ருக்­கெ­தி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென குறித்த யுவதியின் தாய் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் எழுத்து மூலம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

மட்­டக்­க­ளப்பு சத்­துருக்கொண்டான் மூன்றாம் குறுக்­குத் ­தெ­ருவைச் சேர்ந்த சோம­சுந்­தரம் சர்­நீ­தியா (22) என்ற யுவதி கடந்த பெப்­ர­வரி மாதம் குவைத் நாட்டில் உயி­ரி­ழந்தார்.

இவரின் சடலம் கடந்த மாதம் 15 ஆம் திகதி மட்­டக்­க­ளப்­புக்கு கொண்டு வரப்­பட்டு சத்­து­ருக்­கொண்­டானில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

குவைத் நாட்­டிற்கு தனது மகளை சட்ட பூர்­வ­மற்ற முறையில் அனுப்­பிய காத்­தான்­கு­டியைச் சேர்ந்த வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு உப முகவர் ஒரு­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மட்டக்க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரிடம் எழுத்து மூலம் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக அவரது தாய் சோமசுந்தரம் கீதா தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் தெரி­விக்­கையில், காத்­தான்­கு­டியைச் சேர்ந்த வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு உப முகவர் ஒருவர் சர்­நீ­தி­யாவின் வீட்­டிற்கு வந்து குவைத்தில் நல்ல வீட்டு வேலை இருப்­ப­தா­கவும் கூடிய சம்­பளம் கிடைக்­கு­மெ­னவும் பொய் கூறி அவரை குவைத் நாட்­டிற்கு அனுப்­பினார்.

இவரை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் பதிவு செய்­யா­ம­லும், இவ­ருக்கு வெளி­நாடு செல்வ­தற்­கான காப்­பு­றுதி செலுத்­தா­மலும் குறித்த உப முகவர் கொழும்­பி­லுள்ள வெளி­நாட்டு வேலைவாய்ப்பு முகவர்   நிலை­யத்­தி­னூ­டாக வீட்டு வேலைக்­கான விஸா இல்­லாமல் விஸிட் விஸா மூலம் சட்ட பூர்­வ­மற்ற முறையில் குவைத் நாட்­டிற்கு அனுப்­பி­யி­ருந்தார்.

உயி­ரி­ழந்த எனது மகளின் சடலம் கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட போது வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்­திற்கு சென்று இது தொடர்­பாக அறிய முற்­பட்ட போதுதான் சட்­ட­பூர்­வ­மற்ற முறையில் எந்த பதி­வு­க­ளு­மின்றி எனது மகளை குவைத் நாட்­டிற்கு அனுப்­பி­யி­ருந்­தமை தெரி­ய­வந்தது.

எனது மகளின் சட­லத்­துக்கு மேலே வைக்­கப்­பட்­ட­வாறு மகளின் கட­வுச்­சீட்டு மாத்­தி­ரமே காணப்பட்டது.

மகள் உய­ர­மான மாடி­யி­லி­ருந்து வீழ்ந்து உயி­ரி­ழந்­த­தாக பின்னர் கிடைக்கப்­பெற்ற மர­ணத்­திற்­கான காரணம் எழு­தப்­பட்ட அறிக்­கை­யொன்றின் மூலம் அறிந்து கொண்டேன்.

எனது மகள் குவைத்தில் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார் என நினைக்­கின்றேன். எனது மகளின் மரணம் தொடர்பில் எந்­த­வொரு நஷ்­ட­ஈடும் இது­வரை கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

ஒரு ரூபா பணம் கூட குவைத்­தி­லி­ருந்தோ அல்­லது அனுப்­பிய முக­வ­ரி­ட­மி­ருந்தோ கிடைக்­க­வில்லை.

எனது மக­ளுக்கு நான்கு வயதில் ஒரு பிள்ளை உண்டு. எனது கண­வரும் யுத்­தத்­தினால் இறந்து விட்டார். மிகவும் கஷ்­ட­மான குடும்ப சூழ்நிலையில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

குடும்ப கஷ்­டத்தின் கார­ண­மா­கவும் அவரின் குழந்­தையை வளர்த்­தெ­டுக்க வேண்டும் என்­ப­தற்­கா­க­வுமே மகள் குவைத்­துக்கு சென்றார்.

எனவே, எனது குடும்ப நிலையை கருத்திற்கொண்டு எனது மகளை குவைத் நாட்­டிற்கு சட்ட பூர்­வ­மற்ற முறையில் அனுப்­பிய குறித்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த உப­மு­க­வ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இவ்­வா­றான முறையில் வறிய பெண்­களை சட்ட பூர்­வ­மற்ற வகையில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு அனுப்­பு­வதை நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கேட்டுக் கொள்­வ­தாக அந்த முறைப்பாட்டில் தெரி­வித்­துள்­ள­தாக அவர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply