கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
குறித்த பொங்கல் விழாவுக்கு பண்டம் சேகரிக்க சென்ற பயணம், இன்று அதிகாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. குறித்த பண்டங்கள் ஆலயத்தினை சென்றடைந்ததும் பொங்கல் விழா ஆரம்பமாகும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த ஆலயத்தில் தமது நேர்த்தி கடன்களை செலுத்துவதற்காக பெருமளவான காவடிகளும், தூக்கு காவடிகளும், பாற்செம்புகளும் காலை முதல் வருகைதந்து கொண்டிருப்பதுடன், வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பக்தர்களும் தமது நேர்த்திகளை செலுத்தி வருகின்றனர்.
குறித்த பொங்கலானது தொடர்ந்தும் நாளை அதிகாலை வரை இடம்பெம்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொங்கல் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 1000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அங்கு விசேட பொலிஸ் நிலையம் மற்றும் மருத்துவமனை ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.