இன­வாதம், மத­வாதம் பேசு­ப­வர்கள் மற்றும் செய்­தி­களை வெளி­யிடும் ஊட­கங்­க­ளுக்கு எதி­ராக இரண்டு வருடங்கள் சிறைத்­தண்­டனை வழங்கும் சட்டத் திருத்­தத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் கிடைத்துள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் உறுதி மொழி­க­ளுக்­க­மைய இச்­சட்ட திருத்தம் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கவும் அர­சாங்கம் தெரி­வித்­தது.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று வெள்­ளிக்­கி­ழமை கிருலப்­ப­னை­யி­லுள்ள தகவல் ஊட­கத்­துறை அமைச்சில் இடம்­பெற்­றது.

இதன் போதே அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இது தொடர்­பாக இங்கு மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில்;

கடந்த காலங்­களில் நாட்­டுக்குள் இன­வா­தத்தை தூண்டும் விதத்தில் மட்­டு­மல்­லாது மத­வா­தத்தை தூண்டி விட்டு மோதல்­களை ஏற்­ப­டுத்தும் விதத்தில் பலர் கருத்­துக்­களை வெளி­யிட்­டனர்.

பகி­ரங்­க­மாக கூட்­டங்­களில் பேசி­னார்கள். எதிர்­கா­லத்தில் இந்­நிலை வியா­பித்து குல பேதங்­களை தூண்டி விடும் நிலைக்கு செல்லும் ஆபத்து தலை தூக்­கி­யது.

இதன் கார­ண­மா­கவே நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ அமைச்­ச­ர­வைக்கு முன்­வைத்த குற்­ற­வியல் சட்­டக்­கோ­வையின் 22 ஷரத்­திற்­கான திருத்­தத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யது.

இன­வாத மத­வா­தத்தை தூண்டி விடும் விதத்தில் பேசு­ப­வர்­க­ளுக்கும் அவ்­வா­றான செய்­தி­களை வெளியிடும் ஊட­கங்­க­ளுக்கும் எதி­ராக இச்­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­படும்.

அதற்­க­மைய இரண்டு வருட சிறைத்­தண்­டனை வழங்­கப்­படும்

இலங்­கையில் இடம்­பெற்ற பல தசாப்த கால ஆயுதப் போராட்­டத்தை திரும்பிப் பார்த்து அதன் மூலம் பொதுப்­பட்ட அனு­ப­வங்­க­ளுக்கு ஊடாக எதிர்­கால நட­வ­டிக்­கை­க­ளுக்கு எவ்­வாறு உள்­ளீர்ந்து பிரச்சினை­க­ளுக்கு தீர்வு கண்டு சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் யுகத்தை உறுதி செய்து கொள்வ­தற்­காக நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

இந்த ஆணைக்­கு­ழு­வினர் இனங்­க­ளி­டையே ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு பல தரு­ணங்­களில் பங்களிப்பு செய்­ததை கண்­கா­ணித்­துள்­ளனர்.

எனவே இனத்­துவ மற்றும் மதம் தொடர்­பாக குரோ­தத்தை ஏற்­ப­டுத்தும் விதத்தில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வது இனங்கள் மக்­க­ளி­டையே நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தும் நிலை­மையை உருவாக்குகின்றது.

எனவே அதனை தடுப்­ப­தற்கு சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென்றும் அச்­சட்­டங்கள் கடு­மை­யாக நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்றும் இவ்­வாறு கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்கு தடை செய்ய வேண்­டு­மென்றும் இணக்­கப்­பாட்­டுக்கு வரப்­பட்­டுள்­ளது்.

அவ்­வாறு கருத்­துக்­களை வெளி­யி­டு­வோ­ருக்கு தண்­டனை வழங்­கு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டு­களை குற்ற­வியல் சட்­டக்­கோ­வையில் உள்­ள­டக்கி அதற்­கான சட்ட நகல் திருத்தம் தயா­ரிக்­கப்­பட்டு அதனை வர்த்­த­க­மானி அறி­வித்தல் ஊடாக வெளி­யி­டு­வ­தற்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்கும் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைத்­துள்­ளது.

இவ் அமைச்சரவை பத்திரத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ சமர்ப்பித்தார். இனவாதம் மதவாதத்தை தூண்டி விடும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு மட்டுமல்ல அவ்வாறாக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கமைய இரண்டு வருட சிறைத்தண்டனையும் கிடைக்குமென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Share.
Leave A Reply