இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை கூடிய தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு, ஒரு பெரும்பான்மை கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி என்னிடம் இப்படி வினயமாக கேட்டுக்கொண்டார்.
“மனோ, நீங்கள் கடந்த முறை இங்கே தமிழில் தேசிய கீதம் பாடும் விவகாரம் பற்றிய பிரச்சினையை எழுப்பினீர்கள், இனி இப்படியான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை எழுப்பாமல் இருங்கள்.
அது நமது ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது. சமூக ஊடகங்களில் எதிரணிகாரர்கள், நம்மை போட்டு தாக்கியுள்ளார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்”.
அதாவது இலங்கை என்ற “தாய் திருநாட்டை” புகழ்ந்து கூட என் தாய் தமிழ் மொழியில் பாடக்கூடாது. பாடினால் “அவர்கள்” கோபித்து கொள்வார்களாம்.
இதற்கு நான் என்ன பதிலை சொன்னேன் என்பது ஒருபுறம் இருக்க, இது எப்படி இருக்கு? இவ்வாறு தனது ஆதங்கத்தை இது எப்படி இருக்கு எனும் தலைப்பில் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய நிறைவேற்றுச் சபை யின் உறுப்பினருமான மனோகணேசன்.