ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சீனா­வுக்­கான தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை ஆரம்பிப்­ப­தற்கு சில நாட்கள் முன்­ன­தாக, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்- தானி, குறு­கிய நேர இலங்கைப் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார்.

கடந்த மார்ச் 24ஆம் திகதி பகல், சில மணித்­தி­யா­லங்கள் மட்­டுமே இலங்­கையில் தங்­கி­யி­ருந்த அவ­ரது பய­ணத்தின் போது, சில உடன்­பா­டுகள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.

எனினும், அவ­ரது பய­ணத்தின் நோக்கம் குறித்து அதிகம் பேர் அக்­கறை கொள்­ள­வில்லை.

அவர் தனது பய­ணத்தின்போது, மத்­தள சர்­வ­தேச விமான நிலை­யத்தை, குத்­த­கைக்குப் பெறு­வ­தற்கு விருப்பம் வெளி­யிட்ட  பின்னர் தான், அவ­ரது வரு­கையின் சூத்­திரம் பல­ருக்குப் புரியத் தொடங்கியிருக்­கி­றது.

அம்­பாந்­தோட்­டையில், மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் சீனாவின் உத­வி­யுடன் அமைக்கப்பட்ட மத்­தள விமான நிலை­யத்தை, இப்­போது  டுபாய் விமானம் தவிர வேறெந்த விமானங்களும் எட்டிக் கூடப் பார்ப்­ப­தில்லை.

இந்த விமா­னத்தில் கூட, நாளொன்­றுக்கு, 5 அல்­லது 10 பேர் தான் மத்­த­ளவில் வந்­தி­றங்­கு­கின்­றனர். இந்த விமான நிலையம் பொரு­ளா­தார ரீதி­யாக பய­னற்­றது என்று கருதி, இதன் செயற்­பா­டு­களை மட்டுப்­ப­டுத்தத் தொடங்கி விட்­டது புதிய அர­சாங்கம்.

விமானப் பரா­ம­ரிப்பு நிலை­ய­மா­கவோ, பயிற்சி நிலை­ய­மா­கவோ இதனைப் பயன்­ப­டுத்­து­வது குறித்தோ அல்­லது குத்­த­கைக்கு வழங்­கு­வ­தற்கோ ஆலோ­சனை நடத்­தப்­படும் என்றும் இந்த அர­சாங்கம் ஏற்கனவே கூறி­யி­ருந்­தது.

இந்தப் பின்­ன­ணியில் தான், கட்டார் அமீர், இந்த விமான நிலை­யத்தை குத்­த­கைக்குப் பெறு­வ­தற்கு விருப்பம் வெளி­யிட்­டுள்ளார்.

ஆனால், எந்த வரு­வா­யையும் ஈட்ட வழி­யில்­லாத இந்த விமான நிலை­யத்தை குத்­த­கைக்குப் பெற்று, கட்டார் என்ன செய்யப் போகி­றது என்ற கேள்வி உள்­ளது.

அந்தக் கேள்­விக்கு விடை தேடு­வ­தற்கு முன்னர், கட்டார் இதனைக் குத்­த­கைக்குப் பெறு­வ­தற்கு விருப்பம் வெளி­யிட்­டி­ருந்­தாலும், சீனா அதற்கு அனு­ம­திக்­குமா- என்­பது முக்­கி­ய­மான கேள்வி.

சீனாவின் நிலை என்­ன­வென்று இன்­னமும் உறு­தி­யா­க­வில்லை. ஆனால், சீனாவை மீறி நடந்து கொள்வ­திலும் சிக்கல் உள்­ளது.

சீனாவே இந்த விமான நிலை­யத்தை அமைப்­ப­தற்­கான கடன்­களை வழங்­கி­யது.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தின் காலத்தில், இலங்­கைக்கு சீனா வழங்­கிய உத­விகள் அனைத்தும், பரஸ்­பரம் இரு நாடு­க­ளுக்கும், இரு­நாட்டு மக்­க­ளுக்கும், நன்­மை­ய­ளிக்­கத்­தக்­கவை என்று சீனா திரும்பத் திரும்ப வலி­யு­றுத்தி வரு­கி­றது.

அந்தக் கோணத்தில் பார்க்கப்போனால், தான் முத­லீடு செய்து உரு­வாக்­கிய மத்­தள விமான நிலையத்தை, கட்­டா­ருக்கு குத்­த­கைக்கு கொடுக்க சீனா இணங்­குமா என்ற சந்­தேகம் வரவே செய்யும்.

கட்­டா­ருக்கு இந்த விமான நிலை­யத்தை குத்­த­கைக்குக் கொடுக்க இணங்­கினால், அதற்­கெ­தி­ராக சீனா எதிர்ப்புத் தெரி­விக்­கலாம்.

சீனக்­கு­டாவில் தமது விமானப் பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க சீனா இலங்­கை­யிடம் அனு­மதி கோரி­யி­ருந்­தது.

அதற்கு முன்­னைய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­தது. ஆனால், இந்­தி­யாவின் எதிர்ப்பினால், அது பின்னர் கைவி­டப்­பட்­டது.

பின்னர் அந்த விமான பரா­ம­ரிப்பு நிலை­யத்தை, ஹிங்­கு­ராங்­கொ­டையில் ஆரம்­பிக்­கப்­ப­டலாம் என்று கூறப்­பட்­டது. ஆனாலும், அந்த திட்டம் குறித்து பின்னர் எந்த தக­வலும் வெளி­யா­க­வில்லை.

ஒரு­வேளை, மத்­தள விமான நிலை­யத்தை, கட்­டா­ருக்கு கொடுக்க இலங்கை முன்­வந்தால், விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைப்­ப­தற்­காக சீனா அதனைத் தனக்குத் தரு­மாறு கோரலாம்.

அதே­வேளை, சீனா­விடம் மத்­தள விமான நிலையம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­பாது.

அது சீனாவின் தள­மாக மாற்­றப்­படும் என்ற கவலை இந்­தி­யா­வுக்கு ஏற்­படக் கூடும். இந்தச் சிக்­க­லான நிலை இலங்கை  அர­சாங்­கத்­துக்கு இன்­னமும் உரு­வா­காது விட்­டாலும், அதற்­கான வாய்ப்புகளைநிராக­ரிக்க முடி­யாது.

ஏனென்றால், மத்­தள விமான நிலை­யத்தைக் கொத்திக் கொண்டு போக கட்டார் காத்­தி­ருக்­கி­றது. இந்த விமான நிலை­யத்தை வைத்து, கட்டார் எதனைச் சாதிக்கப்போகி­றது?

நிச்­ச­ய­மாக, இதனை வெற்­றி­க­ர­மான ஒரு சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­றி­ய­மைக்க முடி­யாது. என்­றாலும், இதனை வைத்துக்கொள்ள கட்டார் விரும்­பு­வதன் பின்­ன­ணியில், அமெ­ரிக்­காவே இருப்பதாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

கட்­டா­ருக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் நல்ல நெருக்கம் உள்­ளது, இரு நாடு­க­ளுக்கும் இடையில் பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாடும் நடை­மு­றையில் இருக்­கி­றது.

1991ஆம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்­கி­ர­மித்த போது, அதனை விடு­விப்­ப­தற்­காக அமெ­ரிக்க கூட்டணிப் படைகள் மேற்­கொண்ட பாலை­வனப் புயல் நட­வ­டிக்­கையின் போது, கட்­டாரில் அமெ­ரிக்கப் படை­களின் தளம் அமைக்­கப்­பட்­டது.

கட்­டாரில் உள்ள அல்-­உடெய்ட் விமா­னப்­படைத்தளம் இன்­னமும் அமெ­ரிக்கப் படை­களின் வசமே உள்ளது. இந்த தளம், ஆப்­கா­னிஸ்தான், ஈராக்கில் அமெ­ரிக்­காவின் முக்­கி­ய­மான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய பின்­ன­ணியில் தான், மத்­தள விமான நிலை­யத்தை கட்டார் குத்­த­கைக்கு அமர்த்த முனைந்­துள்­ளதும், அமெ­ரிக்­காவின் தூண்­டு­தலில்தான் என்ற கருத்து நில­வு­கி­றது.

அமெ­ரிக்கா சில விவ­கா­ரங்­களில் நேர­டி­யாகத் தலை­யீடு செய்­வ­துண்டு. சில­வற்றில் தனது மறை­முக சக்­தி­களைப் பயன்­ப­டுத்தும்.

உதா­ர­ணத்­துக்கு, அமைதி முயற்­சி­க­ளுக்கு நோர்வே, ஜப்பான் போன்ற நாடு­களைப் பயன்­ப­டுத்­து­வ­துண்டு. அது­போல தென்­கொ­ரியா உள்­ளிட்ட நாடு­களும் அமெ­ரிக்­கா­வினால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­பவை தான்.

கட்­டாரும் அந்த வகை­யி­லா­ன­தொரு மறை­மு­க­மான அமெ­ரிக்கக் கரம் என்றே கரு­தப்­ப­டு­கி­றது. மத்­தள விமான நிலை­யத்தை கட்டார் குத்­த­கைக்கு பெற்­றாலும், அது நேர­டி­யாக அமெ­ரிக்­காவின் விமானத் தள­மாகப் பயன்­ப­டுத்­தப்­படும் என்று கூற முடி­யாது.

அவ்­வாறு பயன்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா உடன்­பாடு செய்து கொள்ள வேண்டும்.

குத்­த­கைக்குப் பெற்ற நாடு, அதனை இரா­ணுவத் தேவைக்குப் பயன்­ப­டுத்த முடி­யாது. எனினும், அது சீனா­வி­னது கையில் போகாமல் தடுப்­ப­தற்கு பயன்­படக் கூடும்.

இது இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரை­யிலும் ஆறுதல் அளிக்­கத்­தக்க விடயம்.

அதே­வேளை, சீனா­வுக்கு இப்­போது, இந்­தியப் பெருங்­க­டலில் தனது வல்­லாண்­மையை விரி­வாக்கம் செய்­வ­தற்கு, இந்­தி­யாவும், அமெ­ரிக்­கா­வுமே தடை­யாக இருக்­கின்­றன.

இந்­தியப் பெருங்­க­டலில், அமெ­ரிக்­கா­வினால் தனித்து சீனாவின் தலை­யீ­டு­களைத் தடுக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால்தான், இந்­தி­யாவின் உத­வி­யுடன், அது சீனாவின் தலை­யீ­டு­களைத் தோற்­க­டிக்கும் நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

இந்தக் கூட்டு, இலங்­கையில் தனது செல்­வாக்கு வலுப் பெறு­வ­தையும் தடுத்து நிற்­கி­றது என்­பதை சீனா உணர்ந்­தி­ருக்­கி­றது.

இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்­றங்­களின் பின்­ன­ணியில், அமெ­ரிக்க, இந்­திய புல­னாய்வு அமைப்புகள் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தாக, மஹிந்த ராஜபக்ஷ கூறிய குற்­றச்­சாட்டும் சீனாவை கரி­சனை கொள்ள வைத்­தி­ருக்கும்.

இந்­தி­யா­வுக்கு சந்­தேகம் ஏற்­படும் படி­யாக- அல்­லது இந்­தி­யா­வுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்தும் படி­யான எந்­த­வொரு திட்­டத்­தையும் இலங்­கையில் இனி முன்­னெ­டுப்­பது சிக்­க­லான காரியம் என்­பது சீனா­வுக்கு இப்­போது தெரிய வந்­தி­ருக்­கி­றது.

சீனாவின் துறை­முக நகரத் திட்­டத்தை, இலங்கை அர­சாங்கம் இடை­நி­றுத்­திய போதே, அது புரிந்துவிட்டது.

இந்­திய நலன்­க­ளுக்கு எதி­ரான எதையும், இனி இலங்­கையில் மேற்­கொள்ள முடி­யாது என்­பது உணரப்பட்­டுள்ள நிலையில், சீனா தனது கடல் வழிப் பட்­டுப்­பாதை உள்­ளிட்ட தொலை­நோக்குத் திட்டங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு, புதிய உபாயம் ஒன்றைக் கையாள ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

அதுதான், இந்­தியா, இலங்கை, சீனா ஆகிய முத்­த­ரப்­பு­களும் இணைந்து செயற்­ப­டுதல்.

இந்த திட்டம், வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, பீஜிங்­கிற்குச் சென்­றி­ருந்த போது, சீனத் தலை­வர்­களால் முதன் முதலில் முன்­மொ­ழி­யப்­பட்­டது.

அதை­ய­டுத்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பய­ணத்தின் போதும், சீன ஜனா­தி­பதி இதனை பிரஸ்­தா­பித்­தி­ருக்­கிறார்.

அதற்கு, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவும் ஆத­ர­வ­ளிப்­ப­தாகக் கூறி­யி­ருக்­கிறார்.

அதை­விட, புது­டில்­லியில் உள்ள சீனத் தூது­வரும் இந்த திட்டம் குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி சீனா­வுக்கு மேற்­கொள்­ள­வுள்ள பய­ணத்தின் போது, இந்த திட்­டத்தை முன்­வைத்துப் பேசு­வ­தற்கு சீனத் தலை­வர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இந்த திட்டம் நடை­மு­றைக்கு வந்தால், இலங்­கையில் சீனத் தலை­யீடு குறித்தோ அல்­லது இந்­தியத் தலை­யீடு குறித்தோ மற்ற நாடு கவலை கொள்ளும் நிலை ஏற்­ப­டாது.

ஆனால், இந்­திய – சீன பிரச்­சி­னைகள் என்­பது, தனியே இலங்­கை­யுடன் மட்டும் தொடர்­பு­டை­ய­தல்ல.

அவ்­வாறு இலங்­கை­யுடன் தொடர்­பு­டைய பிரச்­சி­னை­யாக இருந்தால், அதற்கு ஒரு­வேளை இந்த திட்டம் தீர்­வாக அமைய முடியும். இது இந்த திட்­டத்தின் முக்­கி­ய­மான­தொரு சிக்கல்.

ஆனாலும், அதை­யிட்டு யோசிக்காமல் சீனா இந்த திட்டத்தை முன்வைக்கிறது என்றால், அதற்கு இருக்கக் கூடிய ஒரே காரணம், இந்தியப் பெருங்கடலில் தனது தலையீடுகளுக்கு முட்டுக்கட்டையை தகர்ப்பது தான், குறிப்பாக, தனக்கெதிராக இந்தியாவைப் பயன்படுத்தும், அமெரிக்காவின் முயற்சிகளை உடைப்பது.

இந்திய- – அமெரிக்க கூட்டை உடைப்பதன் மூலம், இந்தியப் பெருங் கடலில் தனது ஆதிக்கத்தை இலகுவாக நிறுவிக் கொள்ள சீனா முனைகிறது.

இதற்காகத் தான், இலங்கையையும் துணை க்கு அழைக்கிறது சீனா. இந்தநிலையில்,

இந்த முக்கூட்டு அணி தனக்கு, ஆபத்தானது என்பதை, அமெரிக்கா உணர்ந்து கொள்ளா மல் இருக்காது.

அத்தகைய நிலையில், இலங்கையையோ, இந்தியாவையோ அது வெளியே இழுத்துப் போட முனையும்.

இப்படியான நிலையில், இலங்கையைச் சுற்றிய வல்லாதிக்கப் போட்டி வலுப்பெறப் போவது உறுதியாகியுள்ளது.

இலங்கை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இதில் அகப்படாமல் தப்பிக் கொள்வது கடி னம்.

Share.
Leave A Reply