யாழில் இருந்து தாயாரைத் தேடி கொழும்பு சென்ற மகள் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தந்தையுடன் தாயும் சேர்ந்து கொழும்பு சென்று பின்னர் தாயார் சுகவீனம் அடைந்துள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன் என மனைவியை கொழும்பில் விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்த தந்தை தனது பிள்ளைகளுக்கு தெரிவித்துள்ளார்.

“அம்மாவுக்கு என்ன நோய்’ என மூத்த மகளான குறித்த யுவதி கேட்டும் தந்தை சொல்லாத காரணத்தால் மகள் சந்தேகம் அடைந்து தனது தாய்க்கு ஏதோ பாரதுாரமான நோய் என எண்ணி துக்கப்பட்டுள்ளாள்.

அதன் பின்னர் தாயார் அனுமதித்திருக்கு வைத்தியசாலை எது எனக் கேட்டும் தந்தை சொல்லாத காரணத்தாலும் தாயுடன் தொலைபேசியில் கதைத்தும் தாயாரும் நோய் பற்றி தெரிவிக்காததாலும் தந்தைக்குத் தெரியாது தனது சித்தியுடன் கொழும்பு சென்றுள்ளாள் யுவதி்.

அங்கிருந்து தொலைபேசியில் தாயுடன் தொடர்பு கொண்டு தாயின் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்ற போது தாய் குழந்தை பெற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகத் தெரியவருகின்றது.

இதன் பின்னர் அன்று இரவு யாழ் திரும்புவதாகத் தெரிவித்து அன்று மாலை கூடுதலான வலி நிவாரண மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றதால் அங்கிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த யுவதி க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளவர் என்பதும் தந்தை அரசாங்க ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாயாருக்கு 44 வயதும் தந்தைக்கு 47 வயது எனவும் இவர்களுக்கு தற்போது பிறந்த ஆண் குழந்தையுடன் சேர்ந்து 4 பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாவது பிள்ளைக்கு 14 வயதாகும்.

……………………………………….
வெளிநாடுகளில்  உள்ள  சில  அம்மாமார்  கலியாண முடிக்கிற வயதில் உள்ள பெண்பிள்ளைகளை கைவிட்டு விட்டு (சொந்த புருசனையும் விட்டு விட்டு)  வேறொருவனுடன்  ஓட்டம் பிடித்துள்ளார்கள். அவர்களோடு  ஒப்பிடும்போது  இந்த தாய்  பறுவாயில்லை.

Share.
Leave A Reply