உணர்ச்சிவசப்பட்டு பேசிய மக்கள்… நழுவிய முதல்வர். யாழ்பாணத்தாருக்கு.. (முக்கியமாக மாணவர்களுக்கு) முதலில் யார் யாருடன் எப்படி பேசவேண்டும், பெரிய மனிதர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்கின்ற “பண்பாட்டை” கற்றுக்கொடுக்கவேண்டும்.
வடமாகான முதலமைச்சருடன் யாழில் தூய நீருக்கான போராட்டம் நடத்துபவர்கள் எப்படி பேசுகின்றார்கள் என்பதை வீடியோவில் பாருங்கள்.
முதலமைச்சர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து இவர்களுடன் பேச வந்ததே பெரிய விடயம். ஆனால் இந்த கூட்டங்களுக்கு அது புரியுமா?
ஏதோ “வாய்” இருக்கிறது என்பதற்காக எல்லோருமே கேள்விக் கணைகளை தொடுத்தால் முதலமைச்சர் எப்படி பதில் அளிக்கமுடியும்?
“யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌவுக்கியமே“. முதலமைச்சர் இப்படி பொது இடங்களுக்கு வந்து மக்களுடன் நேரடியாக பேசுவது சாலசசிறந்ததல்ல.
யாராவது முதலமைச்சர் மேல் “கல்” லால் ஏறிந்து விட்டால என்ன செய்வது?
இனிமேல் காலங்களில் முதலமைச்சர் பாதுகாப்பில்லாத இப்படிபட்ட கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்கவேண்டும.
தூயநீருக்காக நல்லூர் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குழு சந்தித்து பேசியபோதும் பேச்சு வெற்றிபெற்றிருக்கவில்லை.
உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் அமைச்சர்கள் சத்தியலிங்கம், ஜங்கரநேசன்,டெனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் சந்தித்து பேச்சுக்களை நடத்தினர்.
குறித்த விடயம் தொடர்பில் தனது பதிலையளிக்க 12ஆம் திகதிவரை பொறுத்திருக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் எம்.பி. சிறிதரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா போன்றோர் மக்கள் பிரச்சனையில் முன்னுக்கு வந்து பேசுவதில்லையே? ஏன்?
ஆனால்.. எந்த விழா என்றாலும் “மைக்”கை பிடித்து கத்துவதற்கும், மாலைகளோடு எம்.பி. சிறிதரன், ஈ. சரவணபவன், மாவையாரும் முன்னுக்கு வந்து நிற்பார்களே!