மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒரு சிறுவன் முதலைக்குப் பலியாகியுள்ளான்.

இன்று (வியாழக்கிழமை) பகல் இந்த மூன்று சிறுவர்களும் குளத்தின் ஆழம் குறைந்த கரைப்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது மறைந்திருந்த முதலையொன்று அதிசயராஜா ஜெயராஜ் (13) என்ற சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது.

c8 copieசிறுவனின் சகோதரன் குளிக்கச் சென்ற தனது தம்பியை தேடிச் சென்றபோது ஏனைய சிறுவர்கள் இருவரும் தங்களுடன் நீராடிய நண்பன் ஜெயராஜை முதலை இழுத்துச் சென்றது பற்றிக் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் குளத்தில் நடத்திய தேடுதலில் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனின் இடது கால் முறிந்துள்ளதோடு உடலில் ஆங்காங்கே காயங்களும் காணப்படுகின்றன.

d7-720x480 copieஇச் சிறுவனின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார்.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

b8 copiea10 copie

வவுனியாவில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு
09-04-2015

DSC02413-720x480வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 10 வயதுடைய சிறுவனின் சடலமொன்று வீட்டின் பின்புறத்தில் இருந்து மீட்கப்பட்டது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

DSC02408-e1428593789362
வவுனியாவில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு DSC02408 2இன்று (09) மாலை மீட்கப்பட்ட இச்சடலம் 10 வயதுடைய சந்திரசேகரன் சஞ்சய் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறுவன் எவ்வாறு கொலை செய்யப்பட்டான் என்பது தொடர்பில்

வவுனியாவில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு உயிரிழந்த சிறுவன் இன்று பாடசாலையில் இருந்து வீடு வந்த நிலையில், தாயார் அவனுக்கு உணவை வழங்கி விட்டு அருகில் உள்ள வீட்டிற்குச் சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை வீட்டின் பின்புறமிருந்த சடலத்தை உறவினர்கள் தூக்கிவந்து வீட்டிற்குள் வைத்திருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply