யாழ் பல்கலை்ககழகத்தில் கலைப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் தன்னிடம் வந்து கல்வி பயின்ற 16 வயது மாணவியைக் கர்ப்பமாக்கியுள்ளார் .
மானிப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவனிடம் அவனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் க.பொ.த சா.தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் 3 பேர் அவனது வீட்டில் வந்து அவனிடம் கல்வி கற்று வந்துள்ளனர்.
இந் நிலையில் ஒரு மாணவி கடும் சுகவீனம் உற்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவள் கர்ப்பமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவனே கர்ப்பத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் வன்னிப் பகுதியில் தனது பெற்றோரை இழந்து மீண்டும் யாழ் வந்து தனது சித்தியாருடன் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவியை பெற்றோர் கொழும்பு கொண்டு சென்றுள்ளதாகவும் மாணவியின் கர்ப்பத்திற்கு தானே பொறுப்பு என மாணவன் ஒப்புக் கொண்டு 18 வயதுக்குப் பின் அவளைத் திருமணம் முடிப்பதாக மாணவியின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காதலனை தாக்கிவிட்டு காதலியை கடத்திச் சென்ற மர்மக்கும்பல்: யாழில் பரபரப்பு சம்பவம்!
வீட்டைவிட்டு வெளியேறி தனிமையில் வசித்து வந்த காதலர்களை தேடி வந்த கும்பல் ஒன்று காதலனை தாக்கிவிட்டு, காதலியை கடத்திச் சென்றுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10ம் வட்டாரம் புங்குடுதீவு பகுதியில் நேற்றுமுன்தினம் இந்த சம்பவம் நடந்தது.
நல்லூரை சேர்ந்த 24 வயதுடைய யுவதியும், உடுவிலைச் சேர்ந்த வாலிபனும் கடந்த 3 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் அண்மையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, புங்குடுதீவிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர்.
நேற்றுமுன்தினம் முகத்தை கறுப்புத்துணியால் கட்டிக் கொண்டு வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், காதலனை மண்வெட்டி பிடியால் தாக்கிவிட்டு காதலியை அள்ளிச் சென்றுள்ளனர்.
யாழ்.செய்திகள்: கடும் குடிபோதையில் யாழ் பல்கலைக்கழக 3ம் வருட மாணவர்கள் – மாணவனின் தலையை உடைத்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதுவதற்காக சென்றிருந்த மாணவனை 3ஆம் வருட முகாமைத்துவபீட பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதை முறையில் தலைக்கவசத்தால் பின்தலையில் அடித்து உடைத்த சம்பவம் நேற்று மாலை 3மணியளவில் நடைபெற்றுள்ளது.
இம் மாணர்கள் கடும் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது, குறித்த சம்பவத்தால் ஏனைய பல்கலை மாணவர்களும் பயத்தின் நிமித்தம் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் என்ற போர்வையில் கடும் கலாச்சாரச் சீர்கேடுகளை யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் செய்து வருவதும் போதைப்பொருள் பாவிப்பதும் தற்போது அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
குளித்துக்கொண்டிருந்த பெண்ணின் நகைகள் அபகரிப்பு
10-04-2014
யாழ்ப்பாணம், சாட்டிக் கடலில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணுடைய நகைகளை அபகரித்த சந்தேகநபரொருவரை அப்பகுதி மக்கள் பிடித்து வியாழக்கிழமை (09) தங்களிடம் ஒப்படைத்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் சாட்டிக் கடலுக்குச் சென்று குளிப்பதற்கு கடலுக்கு இறங்கும் முன், தனது நகைகளை தனது உறவினரான வயோதிபரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.
இதனை அருகில் இருந்து அவதானித்த இளைஞன் ஒருவன், நகையை முதியவரிடம் இருந்து அபகரித்துக்கொண்டு ஓடவே, அங்கு நின்ற பொதுமக்கள் இளைஞனை பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.