தான் சிறையில் இருந்த போது தன்னை பிணையில் விடுதலை செய்யவென அழுத்தம் கொடுத்த இணையத்தள மருமகன்மார்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
மருமகன்மார்கள் தனது மகள் குறித்து செலுத்து அக்கறையினால் தனக்கு பிணை கிடைத்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
“மருமகன்மார்களின் சங்கத்தை நான் பார்த்தேன். முகப்புத்தகத்தில் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
நான் சிறை சென்றபோது இவ்வாறு ஒன்று உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் நல்லது கெட்டது இரண்டும் நடந்தது. ஆனால் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.