அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் (South Carolina) உள்ள வடக்கு சார்லஸ்டன்(Charleston) பகுதியில், மைக்கல் ஸ்லேகர் (Michael Slager Age-33) எனும் வெள்ளையின பொலிஸ் அதிகாரி நேற்று முன்தினம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

blackman_shot_007
Mercedes  கார்  ஒன்றில் பயணம் செய்த வோல்டர் ஸ்கோட்(Walter Scott Age-50) என்ற கறுப்பின நபரை தொடர்ந்த  பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்.

cara
பின்பு  மைக்கல் ஸ்லேகர்(Michael Slager Age-33) என்ற  வெள்ளையின பொலிஸ் அதிகாரி  கறுப்பின நபரிடமிருந்து (Michael Slage) பெற்ற  ஆவணங்களை  (documents)    சரிபார்க்க சென்ற  நேரம் பார்த்து  காரில்  இருந்த  Michael Slage தப்பியோடும் காட்சிகள்  போலிஸ் காரிலிருந்த  கமராவில் பதிவாகியுள்ளது.

தென் கரோலினா மாநில பொலிசர்  இவ்  வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

தப்பியோடும் கருப்பின ஆண் ஒருவரை வெள்ளையின பொலிஸ்காரர் சுடப்பட்டதைக் காட்டும் புதிய அதிர்ச்சி வீடியோ!
09-04-2015

blackman_shot_004அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் (South Carolina) உள்ள வடக்கு சார்லஸ்டன்(Charleston) பகுதியில், மைக்கல் ஸ்லேகர்(Michael Slager Age-33) எனும் வெள்ளையின பொலிஸ் அதிகாரி நேற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் வோல்டர் ஸ்கோட்(Walter Scott Age-50) என்ற கறுப்பின நபரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வோல்டர் ஸ்கோட் தப்பிக்க முயன்றதால், அவரை மைக்கல் ஸ்லேகர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வோல்டர் ஸ்கோட் பலியானார்.

இதன்பின் முன்னாள் கடற்படை காவலரான வோல்டர் தன்னை தாக்க முயன்றதாகவும், தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாகவும் மைக்கல் உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சம்பவ இடத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை வீடியோவில் பார்த்தபோது, தப்பி ஓடிய வோல்டரை, முதுகில் 5 முறை மைக்கல் சுடுவது தெரியவந்துள்ளது.

மேலும் 8 முறை மைக்கல் துப்பாக்கியால் சுடுவதும், அதில் 3 குண்டுகள் குறி தவறி, எஞ்சிய 5 குண்டுகள் வோல்டரின் உடலை துளைப்பதும் வீடியோ காட்சிகளில் தெரிவாக பதிவாகிவுள்ளது.

சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்றவர் ஒருவர் எடுத்த கைத்தொலைபேசி வீடியோவைப் பார்த்த பின்னர் வடக்கு சார்ல்ஸ்டன் சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மைக்கேல் ஸ்லாகர் என்ற அந்த பொலிஸ்காரரை கைதுசெய்துள்ளனர்.

இந்த வீடியோ பதிவின் மூலம் மைக்கல் கூறுவதை பொய் என்பதை உணர்ந்த மற்ற பொலிஸ் அதிகாரிகள், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

americaaaa

வெள்ளையின அதிகாரிகளால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு நிறுவனமாக எஃப் பி ஐ யும் நீதித்துறையும் சேர்ந்து விசாரிக்கின்றன.

blackman_shot_002blackman_shot_003blackman_shot_005blackman_shot_006

Share.
Leave A Reply