ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார்.

23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை அழைத்துள்ளனர்.

Brunoy (Essonne) காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள் இங்குள்ள Val d’Yerres 2 பல்பொருங் அங்காடிகள் சதுக்கத்திற்கு அருகில் இருக்கும் தொடர்மாடிக் கட்டடத்திற்கு வந்த காவற்துறையினர்,

54e5d51c7a395அங்கு ஒரு சிறீலங்காப் பிரஜை பெரும் பதற்றத்தில் இருந்தததைக் கண்டுள்ளனர். தனது துணைவியார் தங்களது வீட்டில் வைத்துக் கடத்தப்பட்டதாகப் பெரும்பதற்றத்துடன் இவர் காவற்துறையினர்க்குத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண் ஆறு நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தற்காரர்கள் சிலர் ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர் எனவும் அவர்கள் இந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு சுவிற்சர்லாந்து இலக்கத்தகடுடைய சிற்றுந்தில் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினரிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தாங்கள் இருவரும் அடுத்த நாள் திருமணம் செய்ய இருந்தாக இந்தச் சிறீலங்கா குடிமகன் தெரிவித்துள்ளார்.

தங்களது திருமணத்திற்குத் தனது துணைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர் எனவும் அவர்களே இந்தக் கடத்தலை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் இவர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

இவர்கள் மிக அண்மையிலேயெ இந்த வீட்டில் குடியேறியிருந்தனர் எனவும் மிக அமைதியாகவே இருந்தனர் என்றும் அடிக்கடி விருந்தாளிகள் வந்து செல்வார்கள் என்றும், இவர்கள் பற்றி அயலவர்கள் தெரிவித்தனர்.

அதனாலேயே கடத்தலின் போது பெண்ணின் அலறல் கேட்டு இவர்கள் காவற்துறையினரை அழைத்துள்ளனர். இந்த விசாரணை உடனடியாக வேர்செய் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட, மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அனைவரும் தமிழர்களே என உறுதிப்படுத்தப்படாத செய்தித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Essonne : une jeune femme enlevée la veille de son mariage

4669963_policeUn scénario digne d’un film noir. Une jeune femme de 22 ans a été victime d’un kidnapping organisé mardi soir à Quincy-sous-Sénart. Alerté par des cris aux alentours de 23 heures, un voisin avertit le commissariat local de Brunoy (Essonne).

Arrivées dans cet ensemble de petits immeubles plantés à proximité du centre commercial Val d’Yerres 2, les forces de l’ordre tombent sur un homme de nationalité sri-lankaise. Affolé, il explique aux policiers que sa compagne vient d’être enlevée au domicile du couple.

D’origine sri-lankaise elle aussi, elle aurait été emmenée de force par six à huit individus dont certains étaient armés. Selon les déclarations que le compagnon fait aux enquêteurs, les ravisseurs auraient pris la fuite à bord de deux véhicules dont un immatriculé en Suisse.

Lors de son audition, le conjoint de la victime explique que le couple devait se marier le lendemain même du rapt. Selon lui toujours, la famille de la future mariée avait manifesté à plusieurs reprises son opposition à cette union officielle. Elle aurait donc organisé elle-même cet enlèvement pour empêcher ce mariage.

Dans le lotissement, le couple est décrit comme « très discret » par une voisine. « Ils n’habitaient pas l’immeuble depuis très longtemps, assure cette dame. Le couple avait beaucoup de visites à son domicile. Je ne sais pas s’ils avaient des enfants. »

L’enquête sur cet enlèvement a été confiée à la police judiciaire de Versailles.

 

Share.
Leave A Reply